அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பும்.ட்ரம்பின் எதிர்வினையும்.சட்டப்போர் ஓர் பார்வை
"படம் உதவி: விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons)"
முன்னுரை:2026-ஆம் ஆண்டின் தொடக்கம் உலகப் பொருளாதார வரலாற்றில் திருப்புமுனை புள்ளியாக அமைந்தது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்
இரண்டாவது முறை பதவியேற்ற உடனே
அமெரிக்கா ஃபர்ஸ்ட் (America First)என்ற கொள்கையில் பிடிப்பாக இருந்தார்.இந்தக் கொள்கையின் ஒரு படியாக அமெரிக்காவில் இறக்குமதி சார்ந்துள்ள நாடுகளுக்கு அதிகப்படியான வரியை விதித்தார்.
சரியாக 2026,பிப்ரவரி 20-ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் ட்ரம்பின் முந்தைய வரி விதிப்பு அதிகாரங்களை ரத்து செய்தது.இதற்கு நேர்மறையாக
டொனால்ட் டிரம்ப் தனது "அவசரகால அதிகாரங்களைப்"பயன்படுத்தி 10% உடனடியாக வரியை அமலுக்கு கொண்டு வந்தார்.உலக வட்டாரங்களில் அமெரிக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
1.பரஸ்பர வரிவிதிப்பும் சட்டப் போராட்டமும்:
சுருக்கமாகச் சொன்னால் தமிழில் "பழிக்கு பழி" என்ற ஒரு பழமொழி உண்டு.இதுதான் இந்த பரஸ்பர வரி.
"நீங்கள் எங்கள் நாட்டுப் பொருட்கள் மீது எவ்வளவு கூடுதல் வரி விதிக்கிறீர்களோ! அதே அளவு வரியை உங்கள் நாட்டுப் பொருட்களின் மீது நாங்கள் விதிப்போம்!"என்பதாகும்.இதன் மூலம் அமெரிக்கா பரஸ்பர வரி என்ற பெயரில்
பல நாடுகள் மீது 25% முதல் 50% வரை வரிகளை விதித்து.இதனை எதிர்த்து பிப்ரவரி-20 அமெரிக்க அரசுக்கு(Donald Trump)எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது ஒரு பெரிய நிறுவனங்கள் தொடுத்த வழக்கு அல்ல அதற்கு மாற்றாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய மனுதாரர்:
லேர்னிங் ரிசோர்சஸ் (Learning Resources, Inc.):
லேர்னிங் ரிசோர்ஸ் என்ற கல்வி சார்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனம் இதில் முக்கிய மனுதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.சாதாரண பொம்மை தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்கா அதிபரை எதிர்த்து வழக்கு தொடுத்தது
அமெரிக்காவின் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கிறது.
வழக்குக்கான காரணங்கள்:
இவர்கள் தங்கள் தயாரிப்புக்கு தேவையான உதிரிபாகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்."அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25 சதவீத வரி விதிப்பால்
எங்கள் நிறுவனம் தற்சமயம் திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது"என்ற வாதத்தை முன்வைத்தார்.மேலும் அதிபர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்! என்று துணிச்சலாக குரல் எழுப்பினார்.
வோஸ் செலக்ஷன்ஸ் (V.O.S. Selections, Inc.):
இந்த வழக்கிற்கு மற்றொரு முக்கிய மனுதாரர் விக்டர் ஸ்வார்ட்ஸ் (Victor Schwartz) என்பவருக்குச் சொந்தமான வோஸ் செலக்ஷன்ஸ் என்ற மதுபான
இறக்குமதி நிறுவனமும் Terry Precision Cycling, Genova Pipe, FishUSA போன்ற நிறுவனங்கள் சட்டப் போராட்டத்தில் இணைந்தன.
மாநில கூட்டணிகளின் எதிர்ப்பு:
இந்த சட்டப் போராட்டம் தனியார் நிறுவனங்களுடன் முடிவடையாமல்
அமெரிக்காவின் 12 மாநில அரசாங்கங்களும் இந்த வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.இந்த வரி விதிப்பு மாநிலங்களின் வருவாயை குறைக்கிறது என்ற வாதத்தையும் முன் வைத்தன.
2.IEEPA (International Emergency Economic Powers Act - 1977:
இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரின் கையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய "பொருளாதார ஆயுதமாக" கருதப்படுகிறது.ட்ரம்பின் அதிரடி வரிவிதிப்பிற்கு இந்த சட்டம் தான் ஒரு முக்கிய புள்ளி.இந்தச் சட்டம் 1977 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.இதில் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து அல்லது அசாதாரண சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த அதிபருக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
அதிபருக்கு கிடைக்கும் அதிகாரங்கள்:
"தேசிய அவசர நிலையை" அறிவிப்பதன் மட்டுமே இந்த சட்டத்தை முழுவதுமாக அதிபரால் பயன்படுத்த முடியும்.
1.அந்நிய நாடுகளுடனான வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டு வருவது.
2.வெளிநாட்டு சொத்துக்களை முடக்க கூடிய அதிகாரம் அதிபருக்கு உண்டு
3.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீது கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு.
நீதிமன்ற தீர்ப்பு:
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு . ஜான் ராபர்ட்ஸ் (John Roberts) தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட பெரும்பான்மை அமர்வு வரி விதிப்பிற்கு எதிராக அந்த நிறுவனங்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டது.
"வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திற்கு
மட்டுமே உண்டு".மேலும் "பொருளாதாரப் போட்டி என்பது ஒரு தேசிய அவசர நிலையாக எடுத்துக் கொள்ள முடியாது மேலும் இந்த சட்டத்தை பயன்படுத்தி வரிகளை ஏற்றுவது அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததனை அடுத்து வரி விதிப்பை ரத்து செய்தது.
2.Section 122 of the Trade Act of 1974-ஐ கையில் எடுத்த டிரம்ப்:
IEEPA சட்டத்தின் கீழ் போடப்பட்ட வரிவிதிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அடுத்த ஆயுதமாக டிரம்ப் எடுத்தது Section 122 of the Trade Act of 1974 ஆகும்.
இச்சட்டத்தின் சிறப்பியல்புகள்:
அமெரிக்காவின் பொருளாதாரத்தில்
மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் பொழுது வரிவிதிப்பு உட்பட
தன்னிச்சையாக செயல்பட கூடிய அதிகாரம் இச்சட்டத்தின் வழியாக அதிபருக்கு கிடைக்கச் செய்கிறது.
தற்காலிகச் சட்டம் :150 நாள் கெடு
இச்சட்டத்தை பயன்படுத்தி 150 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி
அதிபரால் வரி விதிக்க முடியும்.
அதிகபட்ச வரி 15 %:
இச்சட்டத்தை பயன்படுத்தி ஒரு நாட்டின் மீது இறக்குமதி வரியை 10% இருந்து 15% மட்டுமே ஏற்ற முடியும்.
அதிபரின் தந்திரம்:
நீதிமன்ற உத்தரவில் அதிபர் வரி விதிக்க முடியாது என்று சொல்லவில்லை,மாறாக "அதிபர் தவறான சட்டத்தைப் (IEEPA) பயன்படுத்தி வரி விதித்தார்" என்றுதான் கூறியது.இந்தத் தீர்ப்பின் நுணுக்கத்தை புரிந்து கொண்ட அதிபர்,
"நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு இணங்க"எனக் கூறி
இந்த 150 நாள் தற்காலிக வரி 15% அமல்படுத்தியுள்ளார்.
முடிவுரை:
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அதிபர் ஒரு தற்காலிக தடையாக கடந்து சென்றார்.தனது கொள்கையில் பிடிவாதமான அதிபர்
உடனடியாக 'பிரிவு 122'-ஐப் பயன்படுத்தி வரி விதிப்பை அமல்படுத்தினார்.இது அவரின் விடாமுயற்சியையும் கொள்கையின் மேல் கொண்ட பற்றையும் காட்டுகிறது.இருப்பினும்
இதை அமெரிக்காவில் நடக்கும் சட்டப் போராட்டமாக கருதாமல் இதன் உண்மையான பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
பேனாவில் எழுதக்கூடிய வரிக்கு
உழைப்பினால் எழுதக்கூடிய வரிகள் என்று பதில் சொல்லுமோ?
வாசகர் களம்;
நீதிமன்றமே தடுத்தாலும், மாற்றுச் சட்டங்கள் மூலம் வரி விதிப்பதைத் தொடரும் ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
கருத்துகள்
கருத்துரையிடுக