ட்ரம்ப் நிர்வாகத்தில் அதிர்ச்சி: வெள்ளை மாளிகை கேரோலின் லீவிட் திடீர் ராஜினாமா!

  
   தற்போது அரசியல் வட்டாரத்திலும் சர்வதேச ஊடக அளவிலும் பல்வேறு கோணங்களில் கேள்விகளையும்,  அதிர்வலைகளையும், ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி—அமெரிக்க வெள்ளை மாளிகையின் பிரஸ் செகரட்டரி (Press Secretary) கேரோலின் லீவிட் (Karoline Leavitt) தனது பதவியிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்திருப்பதுதான்.

   வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக விளங்கிய இவர், தற்பொழுது ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க வரலாற்றிலேயே 27 வயதில் இந்த பொறுப்பை ஏற்று சாதனை படைத்த  முதல் நிர்வாகி என்ற பெருமை இவரையே சாரும்.

மேலும் இவர் வெள்ளை மாளிகையின் முதன்மை முகமாகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

   இவரின் ராஜினாமா பற்றிய ஒரு முழு அலசல் இதோ!

A. இள வயதில் நிகழ்த்திய அரசியல் சாதனை!
      2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்
அதிபராக பதவி ஏற்ற போது தனது ஊடகத் தொடர்புகளையும், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திகளையும், உலகிற்குத் தெரிவிக்கும் மிக முக்கிய பணியான
'பத்திரிகைச் செயலாளர்' பொறுப்பை 
கேரோலின் லீவிட்டிற்கு வழங்கினார்.

   இதற்கு முன்னதாக ட்ரம்பின் தேர்தல் பரப்புரையின் போது தேசியப் பத்திரிகைச் செயலாளராக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

B. ராஜினாமாவுக்கான பின்னணி மற்றும் முக்கியக் காரணங்கள்;
       ​கேரோலின் லீவிட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவித்ததன் பின்னணியில், தனிப்பட்ட வாழ்க்கைக் காரணங்களும் (Personal Life & Family Reasons) மற்றும் வெள்ளை மாளிகையின் பணிரீதியான தாக்கங்களும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

1.தாய்மை மற்றும் குடும்ப சூழல்
     கேரோலின் லீவிட்டிற்கு கடந்த மே மாதத்தில் இரண்டாவது பெண் குழந்தை (விவியானா) பிறந்தது.

 மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு அவர் மீண்டும் வெள்ளை மாளிகையில் பணியைத் தொடர்ந்தபோதிலும், தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது அவருக்குப் பெரும் சவாலாக மாறியது.

​"ஒரு தாயாக எனது குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்கும், தாய்மையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் இந்த மிக முக்கியமான பணி பெரும் சவாலாக இருக்கிறது" என அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

2. ஓய்வில்லாத பணி அழுத்தம் (Work Pressure):
    உலகிலேயே மிகக் கடினமான, நேரம் காலமே இல்லாத பணிகளில் ஒன்று "வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர்" பணி! 24 மணி நேரமும் உலகச் செய்திகளையும், அதிபரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து ஊடகங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

​"இந்த ஓய்வில்லாத பணிச்சூழலில் ஒரு தாயாக என்னால் முழுமையாக இயங்க முடியவில்லை" என்று அவர் வெளிப்படையாகப் பேசியது சர்வதேச ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது.

3. ட்ரம்பின் ஆதரவும் வெளிப்புற ஆலோசகர் பொறுப்பும் (அரசியல் பரிமாணம்)
    இந்த ராஜினாமா வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட ஏதேனும் அரசியல் சண்டையாலோ அல்லது கருத்து வேறுபாட்டாலோ நடக்கவில்லை.அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லீவிட்டின் முடிவை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். 

4.புதிய பொறுப்பு (Outside Advisor):
   ​கேரோலின் லீவிட் பதவியில் இருந்து விலகினாலும் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை கவனத்தில் கொண்டு
டொனால்ட் ட்ரம்பின் 'முக்கிய வெளிப்புற ஆலோசகராக தொடர்ந்து செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​C. பதவிக் காலத்தில் எதிர்கொண்ட சவால்களும் ஊடக மோதல்களும்
           
                                              Karoline Leavitt Pressmeet 
​    அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளம் வயதில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பொறுப்பேற்ற கேரோலின் லீவிட்டிற்கு, அந்தப் பணி பெரும் சவாலாகவே அமைந்தது என்றால் அது மறுக்கத்தக்கதல்ல!

சர்வதேச ஊடக மற்றும் ஊடகவியலாளர்களின் காரசாரமான கேள்விகளைத் தினமும் எதிர்கொண்ட அவர், அதிபர் ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளைத் தீவிரமாக நியாயப்படுத்திப் பேசினார்.

 செய்தியாளர் சந்திப்புகளில் தயங்காமல் நேரடியான பதிலடி கொடுக்கும் இவரது வியூகம், பல நேரங்களில் பத்திரிகையாளர்களுடன் கடும் வாக்குவாதங்களை உருவாக்கியது. 

   ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களுக்கு இடையிலும், ட்ரம்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கையை உலகுக்குக் கொண்டு சேர்க்கும் முதன்மை அரணாகவே இவர் செயல்பட்டார்.

 முடிவுரை:
    கேரோலின் லீவிட்டின் இந்த திடீர் ராஜினாமா, சர்வதேச அரசியல் வட்டாரத்திலும் மற்றும் சர்வதேச ஊடக அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 மேலும் வெள்ளை மாளிகையின் அடுத்த பிரஸ் செகரட்டரி யார்? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது

  என்னைப் பொறுத்தவரை வெள்ளை மாளிகைக்கு இது ஒரு இக்கட்டான சூழல் ஏனென்றால் இவரைப்போல் தனித்துவமாகவும், அசாத்தியமான தைரியத்துடனும் (Bold) கிடைப்பது கொஞ்சம் கடினம்.





 

கருத்துரையிடுக

புதியது பழையவை