22 உயிர்களைப் பலிவாங்கிய இஸ்ரேல் தாக்குதல்: வாஷிங்டனில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை பலன் தருமா?

      தற்போது உலக அரசியல் பல அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் ஒருபுறம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மறுபுறம் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகள் வாஷிங்டனில் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருப்பது சர்வதேச அளவில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னணி, பாதிப்புகள் மற்றும் சவால்களை இந்தக் கட்டுரை அலசுகிறது.

A.வாஷிங்டன் உச்சிமாநாட்டின் முக்கியத்துவம்:
ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் தற்போது நிறைவடைந்த நிலையில், மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வாஷிங்டனில் மூன்றாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
            1. மத்தியஸ்தம்;
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும்  வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அமைதி பேச்சுவார்த்தையை தலைமை ஏற்று நடத்துகிறது.
               2பிரதிநிதிகள்;
இந்த பேச்சுவார்த்தையில் லெபனான் தரப்பில் முன்னாள் தூதர் சைமன் கரம் தலைமையிலான குழுவும், இஸ்ரேல் தரப்பில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
              
B. பெயரளவு போர் நிறுத்தமும்: 22 உயிரிழப்புகளும்,
       பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் வன்முறை குறைந்தபாடில்லை.
         1சமீபத்திய தாக்குதல்:
மே 13 அன்று லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இச்செயல்
சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
           2. Save the Children' அமைப்பு வேதனை: மனிதாபிமான நெருக்கடி
தற்காலிக போர் அமலில் இருந்த கடந்த 25 நாட்கள் மட்டும் சராசரியாக நாளொன்றுக்கு நான்கு குழந்தைகள் கொல்லப்படுவதாக 'Save the Children' அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. 
மேலும் இது "பெயரளவு போர்நிறுத்தம்" மட்டுமே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

C. இரு நாடுகளின் முக்கிய கோரிக்கைகள்:
              பேச்சுவார்த்தை மேசையில் இரு நாடுகளின் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளில் பெரும் இடைவெளி உள்ளது.
 1லெபனானின் நிலைப்பாடு:
இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் மற்றும் லெபனானின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை.
2.இஸ்ரேலின் நோக்கம்:
ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பை ராணுவ ரீதியாக வலுவிழக்கச் செய்வது, மற்றும் எல்லையில் இஸ்ரேலிய மக்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது.மேலும் லெபனானுடன் ஒரு முறையான அமைதி ஒப்பந்தத்தை எட்ட இஸ்ரேல் விரும்புகிறது குறிப்பிடத்தக்கது.

D. சவால்கள் மற்றும் முட்டுக்கட்டைகள்:
1. ஹெஸ்புல்லா காரணி:
    லெபனான் அரசு இந்த பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டினாலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு இந்த நேரடிப் பேச்சுவார்த்தையை வன்மையாக எதிர்த்து வருகிறது.அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இல்லாதது ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
 2. அரசியல் அழுத்தம்
லெபனான் அதிபர் ஜோசப் அவுன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன்
நேரடியாகப் பேச மறுத்து வருகிறார்.
இது "தூதரக ரீதியிலான முட்டுக்கட்டை" (Diplomatic Deadlock) எனப் பார்க்கப்படுகிறது.
முடிவுரை:
          ​லெபனானில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து
அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
வாஷிங்டனில் கையெழுத்தாகும் ஒரு நிரந்தர போர்நிறுத்தம் மட்டுமே அவர்களின் காயத்திற்கு மருந்தாகும்.
சர்வதேச நாடுகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, அடுத்த சில நாட்களில் ஒரு புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், களத்தில் துப்பாக்கிகள் மௌனமாகும் வரை, அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை