உலகப் பொருளாதாரத்தில் BRICS எழுச்சி: அமெரிக்காவிற்குச் சவாலா?




பிரிக்ஸ் (BRICS)
BRICS  என்பது உலக அரங்கில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பலமான கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து, வளரும் நாடுகளின் குரலாகச் சர்வதேச அரங்கில் எதிரொலிக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​2001-இல் கோல்ட்மேன் சாக்ஸ் (கோல்ட்மேன் சாக்ஸ்) என்ற வங்கி நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ஜிம் ஓ'நீல் (ஜிம் ஓ'நீல்) என்பவர் இப்பெயரை முதன்முதலில் பயன்படுத்தினார்.இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் என்ற இடத்தில்  வெகு விமரிசையாக நடைபெற்றது 
அப்போது தென்னாபிரிக்கா இந்த அமைப்பில் சேரவில்லை.சரியாக 2010 அன்று தென்னாப்பிரிக்கா இந்த அமைப்பில் தன்னை சேர்த்து கொண்டது. 
BRICS அமைப்பும் அமெரிக்காவும்;
BRICS அமைப்பிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான விரிசல் என்பது உலக அரசியலில் ஒரு முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது.ஏனென்றால்அமெரிக்காவின் பொருளாதாரம் ஆதிக்கத்திற்கு (மேற்கத்திய ஆதிக்கம்) சவால் விடுவதே இந்த அமைப்பின் அடிப்படை நோக்கமாகக் கருதப்படுகிறது."
டாலருக்கு சவால்;
அமெரிக்காவின் மிகப்பெரிய பலம் நாம் அனைவரும் அறிந்ததே ஆம் அந்த டாலர்தான்.பெரும்பாலும் சர்வதேச வர்த்தகம் டாலரில் நடக்கிறது அதற்கு மாற்றாக இந்த பிரிக்ஸ் நாடுகள் தங்கள் நாணயத்திலேயே தங்கள் வர்த்தகத்தை நிர்ணயித்துக் கொள்கின்றன.இது அமெரிக்க டாலரின் செல்வாக்கை உலக அரங்கில் மெல்ல மெல்ல குறைக்கிறது.இது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக முடிகிறது.
ஏனெனில் உலக மக்கள் தொகையில் 45 சதவீதம் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
BRICS அமைப்பில்
அதிகாரபூர்வமாக இணைந்த நாடுகள்;
தற்பொழுது உள்ள நிலவரப்படி பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதிஅரேபியா , எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாக தன்னை இந்த அமைப்பில் சேர்த்துக் கொண்டது.

BRICS கூட்டு நாடுகள்
 மலேசியா மற்றும் தாய்லாந்து (தென்கிழக்கு ஆசியா)
நைஜீரியா மற்றும் உகாண்டா (ஆப்பிரிக்கா) பெலாரஸ், ​​கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் (யூரேசியா) அல்ஜீரியா, கியூபா, பொலிவியா மற்றும் வியட்நாம் .போன்ற நாடுகளால்
மேலும் பிரிக்ஸ் அமைப்பிற்கு வலு சேர்க்கிறது.
ஒருகாலத்தில் வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட BRICS இன்று உலக அரசியலில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு ஒரு பலமான மாற்றாக உருவெடுத்துள்ளது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரையும், வளரும் நாடுகளின் பொருளாதார பலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த அமைப்பு, ஒரு முனை அதிகாரத்தை (Unipolar World) மாற்றி, பல முனை அதிகார மையங்களை (Multipolar World) நோக்கி உலகைச் செலுத்துகிறது.
அமெரிக்க டாலருக்குப் பதிலாகத் தங்களின் சொந்த நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வது மற்றும் புதிய நாடுகளின் சேர்க்கை ஆகியவை உலகப் பொருளாதாரம் வரிசையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வரும் காலங்களில், உலக அமைதியையும் பொருளாதார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பிரிக்ஸ் நாடுகள் விளங்குகின்றன.

என் இனிய வாசகர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
உங்கள் கருத்துக்கு என் தொடுதிரை காத்திருக்கிறது..

கருத்துகள்

கருத்துரையிடுக