நெருப்பு வளையத்தில் மத்திய கிழக்கு : அமெரிக்கா - ஈரான் மோதல் 2026
"படம் உதவி: விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons)"
மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒருமுறை உலகளாவிய போர்ப் பதற்றத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதிலிருந்தே ஈரான் உடனான உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.இதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் உங்களுடன் நான்!1.பதட்டத்திற்கு பின்னணியும்! உச்சபட்ச அழுத்தமும்!
2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஈரானில் வெடித்த மக்கள் போராட்டங்களும், அதை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதும் தற்போதைய மோதலுக்கு அடித்தளமாக அமைந்தது.
A. மக்களின் போராட்டத்திற்கான காரணிகள்:
ஈரானில் 2025-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் போராட்டங்கள் உலக வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.ஈரான் வரலாற்றில் 1979
புரட்சிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நவீன கால எழுச்சியாகக் கருதப்படுகிறது.இந்தப் போராட்டத்தின் தொடக்கம் டிசம்பர் 28, 2025 அன்று டெஹ்ரானின் புகழ்பெற்ற 'கிராண்ட் பஜார்' (Grand Bazaar) சந்தையில் தான் உருவானது.
காரணிகள்;
பண மதிப்பு வீழ்ச்சி:
ஈரானிய நாணயமான 'ரியால்'
(Rial) முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.2025 டிசம்பரில் அதன் மதிப்பு சுமார் 42% வீழ்ந்தது.
விலைவாசி உயர்வு:
அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு ஏறியது இது சாமானியர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்தது.
அடிப்படை வசதிகள் தட்டுப்பாடு:
2025-ஆம் ஆண்டில் ஈரான் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுச் சுமையை சந்தித்து வருகிறது.இதனால் தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகள் இயங்குவதற்கான சூழல் முற்றிலும் முடக்கப்பட்டன.இது அரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சர்வதேசத் தடைகளும் முடக்கமும்:
ஐநா தடைகள்: கடந்த செப்டம்பர் 2025 -இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை
விதித்தது.இதன் மூலம் ஈரானின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டன.இது நாட்டின் பொருளாதார மந்த நிலையை மேலும் தீவிர படுத்தியது.
அமெரிக்காவின் வரி விதிப்பு:
ஜனவரி 2026-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
இது ஈரானை உலக அரங்கில் தனிமைப்படுத்தியது.
மாசா அமினி (Mahsa Amini)- இன் மரணமும் மக்கள் எழுச்சியும்:
மாசா அமினி என்பவர் தன் தலை மறைக்கும் ஹிஜாப் அணியும் விதத்தில் தவறு உள்ளது என 'நெறிமுறைப் போலீசாரால்' (Morality Police) அவர் கைது செய்யப்பட்டார்.இதன் மூலம் அவர் காவலில் வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதன் விளைவாக அவர் கோமாவிற்கு சென்று உயிரிழக்க நேரிட்டது.இவரது மரணம் ஈரானில் "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" (Woman, Life, Freedom) என்ற முழக்கத்துடன் மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. பெண்கள் பொது இடங்களில் தங்களது ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியைக் கத்தரித்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதிகபட்ச அழுத்தம் 2.0;
இந்நிலையில் ஈரான் தன் நாட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியை
தடுக்க "மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா தலையிடும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.மேலும் அணுசக்தி திட்டங்களுக்கு தேவையான யுரேனியச் செறிவூட்டலை 0% ஆகக் குறைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிடிவாதமான கோரிக்கையாக உள்ளது.
தற்போதைய நிலவரம் :10 நாள் அவகாசம்.
பிப்ரவரி 19, 2026 அன்று அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை உலக நாடுகளை
அதிர வைத்தது."ஈரான் அமெரிக்காவின் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால்,
அடுத்த 10 முதல் 15 நாட்களில் மிக மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்" என அவர் எச்சரித்துள்ளார்.
வலுசேர்க்கும் சூழல்கள்:
# அமெரிக்காவின் USS Gerald R. Ford பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல் பாரசீக வளைகுடாவை நோக்கி நகர்ந்துள்ளது.
# நார்வேயில் நடைபெறவிருந்த நேட்டோ (NATO) கூட்டுப் பயிற்சியிலிருந்து தனது அதிநவீன F-35 போர் விமானங்களை விலக்கி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
# ஈரானின் முக்கிய பதவியில் இருக்கும் தலைவர்களை குறிவைத்து தாக்குவது
ஆட்சி மாற்றத்தை அமல்படுத்துவது போன்ற திட்டத்தை அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானின் எதிர்வினை மற்றும் ரஷ்யாவின் பங்கு:
"அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது"என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.இதனை எதிர்க்கும் விதமாக கடந்த பிப்ரவரி 19 அன்று ஓமன் வளைகுடாவில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கூட்டு கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi), சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். "ஈரான் ஒரு புதிய வரைவுத் திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அது சில நாட்களில் சமர்ப்பிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்ப் நிர்வாகம் இதனை காலம் கடத்தும் தந்திரமாகவே கருதுகிறது.
உலகளாவிய தாக்கம்:இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
1 போர் மூளும் அபாயத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்கு மிக முக்கியக் காரணம் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) எனப்படும் கடல்வழிப் பாதையாகும்; உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரை இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. போர் மூண்டால் ஈரான் இந்தப் பாதையை மறிக்கக்கூடும் என்ற அச்சத்தாலும், எண்ணெய் கிணறுகள் மீதான தாக்குதல் அபாயத்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் என்று வர்த்தகர்கள் கணிப்பார்கள். இந்தத் தட்டுப்பாட்டினால் (Supply shortage) தேவை அதிகரிக்கும் போது, சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை அதிரடியாக உயர்ந்து, அது பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும்.
2 இந்திய மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகள் இந்த வாரத் தொடக்கத்தில் பெரும் சரிவை சந்தித்தது.
3 லெபனான், காசா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் நிலவும் நிழல் யுத்தங்கள் (Proxy Wars) இந்த நேரடி மோதலால் மேலும் தீவிரமடையக்கூடும் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.
முடிவுரை:
தற்போதைய சூழல் ஈரானின் வசம் உள்ளது.அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் ஒரு இணக்கமான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மத்திய கிழக்கில் ஒரு நேரடி ராணுவ மோதலைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.
அமெரிக்கா - ஈரான் மோதல் என்பது வெறும் இரண்டு நாடுகளின் பிரச்சனை அல்ல, அது உங்கள் சமையலறை எரிவாயு விலை வரை பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம்.
"போர் இழப்புகளை மட்டுமே தரும் தீர்வுகளை அல்ல"என்பது என் கருத்து!
வாசகர் களம்
ஒரு நாட்டின் அரசியல் மற்றும் அணுசக்திப் போட்டிகளுக்கிடையில், சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளும் வாழ்வாதாரமும் நசுக்கப்படுவது நியாயமா? உலக நாடுகள் இதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என நினைக்கிறீர்கள்?
கருத்துகள்
கருத்துரையிடுக