ஈரானில் நிலவி வரும் போருக்கான சூழலையும் மற்றும் அங்கு நிலவி வரும் பதற்றத்தையும் கருத்தில் கொண்டு
அங்கு வாழக்கூடிய இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது."ஈரான் வாழ் இந்தியர்களே உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்"என்ற எச்சரிக்கை அங்கு நிலவிவரும் போர் சூழலை நம்மால் உணர முடிகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் வலுக்கட்டாயமான பிடிவாதத்தால் அங்குள்ள மக்களின் நிலைமை என்ன ஆகுமோ என்று உலக நாடுகளுக்கு இடையே ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.
ஈரான்-அமெரிக்கா பதற்றம்: இந்தியர்கள் வெளியேறத் தூதரகம் எச்சரிக்கை - ஒரு விரிவான பார்வை!
மத்திய கிழக்கு நாடுகளான ஈரானில் நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல் உலக நாடுகளுக்கு இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஈரான் பல்வேறு உள்நாட்டு கலவரங்களாலும்
,சர்வதேச அழுத்தத்தாலும்,தத்தளித்து வருகிறது.இந்நிலையில் அங்கு வாழக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 23, 2026 அன்று தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வாழக்கூடிய இந்தியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை
விடுத்தது."ஈரான் வாழ் இந்தியர்களே
உங்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்!என்ற எச்சரிக்கை அங்கு நிலவிவரும் சூழலை நம்மால் உணர முடிகிறது.மேலும் இது அவசரகால ஆலோசனையாக இந்திய தூதரகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!
தற்போது நிலவி வரும் சூழலும் தூதரகத்தின் எச்சரிக்கையும்;
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதன்படி ஈரானில் உள்ள மாணவர்கள், புனிதப் பயணிகள் (Pilgrims), வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைத்து இந்திய குடிமக்களும் தங்களுக்கு கிடைக்க
கூடிய வணிக ரீதியான விமானங்கள்,
அல்லது இதர போக்குவரத்து சேவைகள்
-மூலம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.மேலும் தற்போதைய சூழல் மிகவும் மோசமானதாக மாறி வருவதால் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதற்றத்திற்கான பின்னணி மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகள்:
ஈரானில் தற்போது நிலவி வரும் சூழலுக்கு இரு முக்கிய அடிப்படை காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் உள்நாட்டில் ஈரான் அரசுக்கு எதிராக வெடிக்கும் தொடர் போராட்டங்கள்.மற்றொரு பக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் மதவாத ஆட்சி,ஆகிய காரணிகள் ஈரானின் பதற்றத்தை அதிகரிக்கிறது.மேலும் பல்கலைக்கழகங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது வாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படுகின்றன.இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களில் வன்முறையாக மாறியது.இந்நிலையில் இந்தப் போராட்ட களத்தில் அயல்நாட்டினர் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் தகவல் பரிமாற்றத்திற்கான அனைத்து வழிகளும் முட்டுக்கட்டை போடப்பட்டது.
அமெரிக்கா ஈரான் இடையே போருக்கான வானிலை:
சர்வதேச அளவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மோதல் போக்கு நிலவி வருகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் "ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு ஆதாரமான யுரேனியம் செறிவூட்டலை 0%-ஆக குறைக்க வேண்டும்"என்ற அழுத்தத்தை முன்வைத்தது.மேலும் அதற்கு 10-ல் இருந்து 15 நாட்கள் கெடு வைத்தது.
ஈரான் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது நாங்கள் ராணுவ தாக்குதல் நடத்துவோம் இதனை யாராலும் தவிர்க்க முடியாது என்று
அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.
இந்த அச்சுறுத்தலை வலுப்படுத்தும் விதத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களையும் ராணுவத் தளவாடங்களையும் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.பிப்ரவரி 26 அன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்தால் நிலைமை மோசமடைய வாய்ப்பு உள்ளது.
ஈரான் வாழ் இந்தியர்களின் நிலை:
ஈரானில் தோராயமாக பத்தாயிரத்துக்கும் மேல் இந்தியர்கள் வசித்து வருகின்றன.இவர்களில் பெரும்பாலும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்த புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் அடங்கும்.
இந்நிலையில் அங்கு நிலவி வரும் போர் சூழல் காரணமாக இவர்களை வெளியேற்றுவது ஒரு சவாலாக அமைகிறது.இதைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஏற்கனவே நான்கு அவசர கால உதவி எண்களை (Helplines) அறிவித்துள்ளது:
படம் உதவி:Embassy of India, Tehran அலைபேசி எண்கள்:
+989128109115
+989128109109
+989128109102
+989932179359
மின்னஞ்சல் முகவரி:
cons.tehran@mea.gov.in
ஈரானில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் இணையதள முடக்கத்தால் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அந்தப் பதிவை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப்போகுது?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(Jaishankar ) மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi)ஆகிய இருவரும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மேலும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றுவதற்கான வசதி பற்றி தொடர்ந்து ஆலசித்து வருகின்றன.
வணிக ரீதியான விமான சேவை துண்டிக்கும் நேரத்தில் இந்திய விமானப்படை அல்லது சிறப்பு விமானங்கள் மூலம் "ஆபரேஷன் கங்கா" அல்லது "ஆபரேஷன் காவேரி" திட்டத்தின் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக தெரிகிறது.
இந்திய தூதரகத்தின் ஆலோசனை:
தூதரகத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உடனடி வெளியேற்றம்:
வணிக ரீதியான விமானங்கள் தற்போது இயக்கப்படும் நிலையில்
காலம் தாழ்த்தாமல் உடனடியாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு வெளியேற வேண்டும்.
காலம் தாழ்த்தாமல் உடனடியாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
போராட்டக் களங்களைத் தவிர்த்தல்:
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களத்திற்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தொடர்பில் இருத்தல்:
தூதரகத்தின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து கவனித்து வரவும் தூதரகம் ஆலோசித்தது.
ஆவணப் பாதுகாப்பு:
பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.மேலும் அவற்றின் நகல்களை டிஜிட்டல் முறையிலும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முடிவுரை
ஈரானின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்த ஆண்டு எழுதப்போகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.ஒருபுறம் உள்நாட்டு புரட்சி மறுபுறம் சர்வதேச அழுத்தம் இந்த இரண்டுக்கும் இடையில்
ஈரானின் எதிர்காலம் என்னவாகுமோ?
இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியக் குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பதே மத்திய அரசின் தலையாயக் கடமையாகும்.தூதரகத்தின் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்புங்கள்.
மீண்டும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!
போர் இழப்புகளை மட்டும் தான் தரும்! தீர்வுகளை அல்ல!
கருத்துகள்
கருத்துரையிடுக