இந்தியா - மத்திய கிழக்கு நாடுகளின் உறவு: வெறும் வர்த்தகமா அல்லது வியூகமா?


இந்தியா - மத்திய கிழக்கு நாடுகளின் ராஜதந்திர நகர்வுகளும் பொருளாதார வளர்ச்சியும்.
இந்தியா மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு வெறும் கச்சா எண்ணெய் வாங்குவது சார்ந்து முடிவடையாமல் இது ஒரு பெரிய பிணைப்பை உருவாக்குகிறது.இது ஒரு பெரிய புவிசார் வியூகமாக நான் பார்க்கிறேன்.இந்த உறவின் பின்னணியில் நாம் ஆராய்ந்து பார்த்தால் பல தசாப்தங்களாக இந்தியா மத்திய கிழக்கு ஒரு "பெட்ரோல் பங்கு" ஆக மட்டுமே பார்த்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது." இதற்குப் பின்னால் உள்ள புவிசார் அரசியல் காரணங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்..."
பல தசாப்தங்களாக இந்தியா மத்திய கிழக்கு ஒரு "பெட்ரோல் பங்க்" ஆக மட்டுமே பார்த்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.ஆமாம் இந்தியா - மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான உறவு சிகரத்தின் உச்சத்தை தொட்டது. இதன் மூலம் 
சவுதி அரேபியாவின் 'அராம்கோ' மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'முபதாலா' போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கிறது.
இந்தியாவின் நம்பகத் தன்மை மற்றும் வளர்ச்சி மற்ற நாடுகளை ஈர்க்கின்றன.இந்த உறவோடு மட்டுமல்லாமல் உங்களோடு ஒரு உறவாக நான் பேசுகிறேன்.
வரலாற்றுப் பின்னணி:
இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. முன்பு வெறும் 'வாங்குபவர்-விற்பனையாளர்' என்றிருந்த உறவு, தற்போது பரஸ்பர முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பாக வளர்ந்து, 'மேற்கு நோக்கிப் பார்' (Look West) கொள்கையின் மூலம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
"சீனாவிற்கு ஒரு சவால்",:
சீனாவின் 'ஒரே மண்டலம் ஒரே பாதை ( BRI ) திட்டத்திற்கு எதிர்முனையாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் ( IMEC ) உருவாக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கிறது.இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் சரக்குப் போக்குவரத்து நேரம் 40% குறையும் எனத் தகவல்கள் கூறுகின்றன.இது வெறும் வர்த்தக பாதையாக மட்டுமல்ல 
சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவின் ராஜதந்திர நகர்வாக நான் பார்க்கிறேன்.
டிஜிட்டல் ராஜதந்திரம் (Digital Diplomacy):இந்தியா தனது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் UPI (Unified Payments Interface) முறையை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் போன்ற நாடுகள் ஏற்கத் தொடங்கியுள்ளன. இது அந்த நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஊருக்குப் பணம் அனுப்புவதை எளிதாக்குகிறது.
எரிசக்திப் பாதுகாப்பில் புதிய திருப்பம்: மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவின் விண்வெளித் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இஸ்ரோவின் (ISRO) ராக்கெட்டுகள் மூலம் அந்த நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் இந்திய ராணுவம் மற்றும் கடற்படை, அந்த நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உணவுப் பாதுகாப்பு (Food Security):இந்தியா - மத்திய கிழக்கு உறவில் 'உணவு' ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவின் 'உணவுப் பூங்காக்களில்' (Food Parks) முதலீடு செய்கின்றன. இதன் மூலம் இந்தியா அந்த நாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது; பதிலுக்கு அந்த நாடுகள் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இது ஒரு பரஸ்பரப் பயன் தரும் உறவாகும்.
கடற்படை ஒத்துழைப்பு;
அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரம்
ஒருகாலத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருந்த நாடுகள், இன்று தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய வியூக வெற்றி.
I2U2 கூட்டணி;
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா இணைந்த I2U2  கூட்டணி, தொழில்நுட்பம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற துறைகளில் ஒரு புதிய அதிகாரம் மையத்தை உருவாக்கியுள்ளது.மத்திய கிழக்கு நாடுகள் மோதலில் சிக்கி உள்ள போது இந்தியா தன்னை சமாதானம் விரும்பியாக முன்னிறுத்திக் கொள்கிறது.
எதிர்கால சவால்கள்:இரு நாடுகளுக்கும் இடையே உறவு வலுவாக இருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் இந்தியாவின் வர்த்தகப் பாதைகளுக்கு (IMEC) ஒரு சவாலாக உள்ளன. இந்தியா தனது 'அனைத்து நாடுகளுடனும் நட்பு' என்ற கொள்கையின் மூலம் இந்தப் பதற்றமான சூழலையும் மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறது.
முடிவுரை:
முடிவாக இந்தியா - மத்திய கிழக்கு உறவு என்பது வெறும் பணப் பரிமாற்றம் அல்ல; இது ஆசியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் ஒரு "புவிசார் அரசியல் சதுரங்கம்".
வாசகர் களம்;
​"இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழிப்பாதை (IMEC) திட்டம், சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தைத் தடுக்குமா? உங்கள் கருத்து என்ன?"

கருத்துகள்