தமிழகத்தில் அரசியல் பரபரப்பு: விஜய்க்கு ஆளுநர் முட்டுக்கட்டையா? கொதிக்கும் பிரகாஷ் ராஜ்!




தமிழக அரசியல் களம் தற்பொழுது வரலாறு காணாத மிகப்பெரிய அதிருப்தியையும் கொந்தளிப்பையும்
சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும், ' தமிழக வெற்றிக் கழக ' தலைவர் விஜய் ஏன் இன்னும் முதலமைச்சராகப் பதவியேற்கவில்லை? ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு உட்பட்டதா? இந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஏன் இவ்வளவு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்? 

ஏ.என்ன நடக்கிறது கோட்டையில்?
            ( பட ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ் )
 தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி
        நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ( தவெக ) தனிப்பெரும் கட்சியாக எந்த ஒரு கூட்டணி பின்புலம் இல்லாமல் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான மந்திர எண் ( Magic number ) 118 . வெறும் 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ( 5 எம்.எல்.ஏக்கள் ) தனது ஆதரவை விஜய்க்கு வழங்குவதாக அறிவித்தது.மீதமுள்ள 5-6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் என்ற நிலையில் விஜய் உள்ளார்.

பி.ஆளுநரின் பிடிவாதம்: நியாயமானதா?
விஜய் நேற்று இரண்டாவது முறையாக ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ​​"ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏக்களின் கையெழுத்திட்ட கடிதங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்" என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் (ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக, ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக வரும்போது, ​​அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதே மரபு. ஆனால், இங்கு ஆளுநர் முன்கூட்டியே ஆதரவு கடிதங்களைக் கேட்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

சி ." அருவருக்கத்தக்க நடத்தை" - பிரகாஷ் ராஜ் காட்டம்
     ( Image Source Wikimedia Commons ) இந்த விவகாரத்தில் திரையுலகில் இருந்தும், அரசியல் தளத்திலிருந்தும் பல குரல்கள் ஒலிக்கின்றன. அதில் மிக முக்கியமான நடிகர் பிரகாஷ் ராஜின் பதிவு. இவ்வாறு அவர் தனது எக்ஸ் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டதாவது:
"ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது. நமக்குள்ளே பல கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால், விஜய்க்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்."

பிரகாஷ் ராஜின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. " மக்களாட்சியில் ஆளுநரின் தலையீடு இருக்கக் கூடாது" என்ற கோஷத்தை வலுப்படுத்தியுள்ளது.

D.  ரிசார்ட் அரசியலும், திக் திக் நிமிடங்களும்
         (பட ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ்) 
  விஜய் ஆட்சி அமைப்பதைத் தவிர்க்க மற்ற கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளன. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குதிரை பேரம் ( Horse Trading) நடக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

இ.மகுடம் சூடப்போகும் 'மெகா' கூட்டணி: யார் யார் ஆதரவு?
         தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய கூட்டணி விஜய் தலைமையில் உருவாகியுள்ளது. ' தமிழக வெற்றிக் கழகம் ' 108 இடங்களைப் பெற்ற நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற இலக்கை எட்ட விஜய்க்குப் பிற கட்சிகளின் ஆதரவு அத்தியாவசியமானது.
     தற்போதைய நிலவரப்படி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகள்:
ஏ.இந்திய தேசிய காங்கிரஸ்: 5 எம்.எல்.ஏக்கள் ( திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகி விஜய்க்கு ஆதரவு).
 
பி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிகே): 2  எம்.எல்.ஏக்கள்

சி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML): 2 எம்.எல்.ஏக்கள்.

D.இந்திய கம்யூனிஸ்ட் (CPI) & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M):
தலா 2 எம்.எல்.ஏக்கள்.

F. உடையுமா திராவிடக் கோட்டை?
பல தசாப்தங்களாக திமுக - அதிமுக என இரு துருவ அரசியலை மட்டுமே பார்த்த தமிழகத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜயுடன் கைகோர்த்திருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இது வெறும் தேர்தல் வெற்றிக்கான கூட்டணி மட்டுமல்ல, தமிழகத்தில் ஒரு மாற்று அரசியலுக்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

G. பதவியேற்பு விழா: நாள் குறித்தாயிற்று!
சனி (மே 9, 2026) மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரைச் சந்தித்தார் விஜய், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதற்கு பச்சைக்கொடி காட்டிய ஆளுநர், விஜயை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.
முக்கியத் தகவல்:
நாளை மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 3:15 மணிக்கு, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளார்.

ನ್ನಿಕ್ಕ
       தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கூட்டணி பின்புலமும் இல்லாமல், தேர்தலுக்கு முன்பு " தனித்துப் போட்டி " என்ற துணிச்சலான முடிவை எடுத்து 108 இடங்களைக் கைப்பற்றியது விஜய்யின் அசாத்தியமான அரசியல் எழுச்சி என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்தத் தனித்துவமே இப்போது அவருக்கு ஒரு சவாலாகவும் மாறியுள்ளது.
தேர்த்தலுக்கு முன்பே ஒரு வலுவான கூட்டணியை அமைத்திருந்தால், இன்று 118 என்ற மேஜிக் எண்ணைத் தாண்டி ஒரு நிலையான ஆட்சியை அவர் உறுதி செய்திருக்கக்கூடும். ஆனால், இப்போது ஆட்சி அமைக்கத் தேவையான அந்த சொற்ப இடங்களுக்காக, தேர்தலுக்குப் பின் பிற கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
எந்த நேரத்திலும் கழன்று கொள்ளக்கூடிய இந்தத் 'தேர்தலுக்குப் பிந்தைய' ஆதரவு, விஜய்யின் "மாற்று அரசியல்" பாதையில் ஒரு முள் படுக்கையாகவே இருக்கும். ஆதரவு தரும் கட்சிகளின் நிபந்தனைகளும், திரைமறைவில் நடக்கும் அரசியல் நகர்வுகளும் விஜய்யை சுதந்திரமாகச் செயல்பட விடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
கோட்டையில் நுழைவதை விட, நிலையற்ற இந்தக் கூட்டணிக் கணக்குகளுக்கு நடுவே அரியணையைத் தக்கவைத்துக் கொள்வதுதான் விஜய்க்கு விடப்பட்டிருக்கும் உண்மையான அக்னிப்பரீட்சை. இந்தச் சவால்களை முறியடித்து அவர் ஒரு நிலையான ஆட்சியைத் தருவாரா அல்லது தமிழகம் மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கித் தள்ளப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாசகர் களம்:
                 "தேர்தலுக்கு முன்பே விஜய் ஒரு மெகா கூட்டணியை அமைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது 'தனித்துப் போட்டி' என்ற அவரது துணிச்சலான முடிவுதான் இந்த 108 இடங்களுக்குக் காரணமா? உங்கள் கருத்து என்ன?"

கருத்துகள்