பாரதத்தின் டிஜிட்டல் மகுடம்: உலகளாவிய AI தாக்க உச்சி மாநாடு 2026 – ஒரு விரிவான பார்வை
இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence)
உருவெடுத்துள்ளது.இந்தத் தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா தன்னை பார்வையாளராக அறிமுகம் செய்யாமல் உலகை வழிநடத்தும் ஒரு 'விஷ்வ குரு'வாகதன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
"பிப்ரவரி 16, 2026" அன்று புது தில்லியின் பாரத் மண்டபத்தில் தொடங்கியுள்ள "உலகளாவிய AI தாக்க உச்சி மாநாடு",இந்திய டிஜிட்டல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.இந்த மாநாட்டில்
20-க்கும் மேற்பட்ட நாடுகளின் அதிபர்கள்.50-க்கும் உலகளாவிய நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, உலகத் தொழில்நுட்ப வரைபடத்தை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.
மாநாட்டின் தத்துவப் பின்னணி: ('சர்வஜன ஹிதாய')
மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, அமெரிக்கா, கனடா,போன்ற நாடுகள்
AI தொழில்நுட்பத்தை பெரும்பாலும் வணிக லாபத்திற்காகவும், கார்ப்பரேட் ஆதிக்கத்திற்காகவும் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியா ஒரு மாறுபட்ட தத்துவத்தை முன்வைக்கிறது.
அதாவது . "சர்வஜன ஹிதாய, சர்வஜன சுகாய" இதன் பொருள் அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதாகும்.இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் என்பது ஒரு சிலரின் கைகளில் முடங்கிக் கிடக்காமல், சமூகத்தின் கடைசி வரிசையில் இருக்கும் மனிதனுக்கும் பயன் தர வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி தனது துவக்க உரையில் குறிப்பிட்டது போல,"இந்தியாவுக்கு AI என்பது 'Artificial Intelligence' மட்டுமல்ல அது 'Aspirational India' (லட்சிய பாரதம்) ஆகும்.
மாநாட்டின் முக்கிய ஏழு தூண்கள் (The Seven Pillars)
இந்த ஐந்து நாள் மாநாடு, AI-ன் எதிர்காலத்தை ஏழு முக்கிய பிரிவுகளாகப் பிரித்து விவாதிக்கிறது:
1. AI ஜனநாயகமயமாக்கல் (Democratization of AI):
தொழில்நுட்ப இடைவெளியை குறைத்து வளர்ந்த நாடுகள் மட்டுமே அனுபவிக்க கூடிய AI-ன் பலன்களை 'Global South' எனப்படும் வளர்ந்து வரும்
நாடுகள் மலிவான விலையில் கிடைக்க இந்தியா ஒரு பாலமாகச் செயல்படுகிறது.
2. பாதுகாப்பான மற்றும் அறநெறி சார்ந்த AI (Safe & Ethical AI):
AI தொழில்நுட்பத்தினால் ஏற்படும் ஆபத்துகளான 'டீப்ஃபேக்' (Deepfakes),
போலிச் செய்திகள் மற்றும் தரவுத்
திருட்டு ஆகியவற்றைத் தடுக்கவும்,மேலும் சர்வதேச அளவில் ஒருமித்த திட்டங்களை உருவாக்கவும்
இங்கு விவாதிக்கப்படுகிறது. "தொழில்நுட்பம் என்பது மனிதநேயத்தைக் கடக்க ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது "என்பதில் உறுதியாக உள்ளது.
3. சுகாதாரம் மற்றும் மருத்துவப் புரட்சி:
இந்தியாவின் நகர் மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட AI-ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.மேலும் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற ஆய்வறிக்கையை AI மூலம் துல்லியமாக ஆய்வு செய்து ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டது.
4. வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு:
இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க AI மூலம் மண்ணின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் மேலாண்மை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் 'அக்ரி-ஸ்டேக்' (Agri-Stack)
திட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
5. மொழித் தடையற்ற தொடர்பு (Bhashini AI):
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசக்கூடிய பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மொழி என்பது ஒரு தடையாக இருக்கக்கூடாது. 'பாஷினி'என்ற AI தளம் மூலம், ஒரு நபர் தனது தாய்மொழியில் பேசினால், அது உடனடியாக மற்ற 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வசதி இந்த மாநாட்டின் ஈர்ப்பு மையமாக உள்ளது.
6. பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு:
2030-க்குள் இந்தியாவின் இலக்கான ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தில் AI-ன் பங்களிப்பு மட்டுமே 500 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு AI சார்ந்த திறன் பயிற்சிகளை அளிப்பதற்கும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
7. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்:
மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த கூடிய 'Green AI' போன்ற செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் இந்தியா மும்முரம் காட்டி வருகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தரவு மையங்களை (Green Data Centers) அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உலகத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு:
இந்த மாநாட்டில் கூகுள் சி.இ.ஓ
சுந்தர்பிச்சை,மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் என்விடியா (NVIDIA) தலைவர் ஜென்சன்ஹுவாங்
ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இந்தியா ஏற்கனவே தனது 'IndiaAI Mission' திட்டத்திற்காக 10,000-க்கும் மேற்பட்ட GPU-க்களை (Graphics Processing Units) கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.இது இந்தியாவின் சொந்த AI சூப்பர் கம்ப்யூட்டிங் கட்டமைப்பை வலுப்படுத்தும்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும்
பிரேசில் அதிபர் லூலா ஆகியோர், இந்தியாவின் இந்த 'டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு' (Digital Public Infrastructure) முறையைத் தங்கள் நாடுகளிலும் பின்பற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
சவால்களும் தீர்வுகளும்:
AI-ஆல் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் உலகளவில் பெரும் பேசு பொருளாக உள்ளது.ஆனால் தற்பொழுது இந்த மாநாடு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது .காரணம் அந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்து
"வேலைகள் போகாது, மாறாக வேலை செய்யும் முறை மாறும்"
மேலும் பழைய முறைகளுக்குப் பதிலாக, புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருகிறது.
முடிவுரை: விக்சித் பாரத் 2047-க்கான பாதை:
இதை வெறும் ஒரு தொழில்நுட்ப உச்சி மாநாடாக எடுத்துக் கொள்வதை விட
இது இந்தியாவின் எழுச்சியில் ஒரு புதிய தொடக்கமாக கருத்தில் கொள்ள வேண்டும்.மேலும் 'டிஜிட்டல் இந்தியா'
திட்டத்தில் தொடங்கி இன்று 'AI இந்தியா' இந்தியா பயணித்து வந்த பாதை வியக்கத்தக்கது.2047-ல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக (Viksit Bharat) மாற வேண்டுமானால், அதற்கு AI ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும்.
இந்த மாநாடு உலகிற்கு சொல்லக்கூடிய செய்தி ஒன்றுதான்
"தொழில்நுட்பம் என்பது அதிகாரத்திற்கான கருவி அல்ல, அது அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதற்கான கருவி."
இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுகளும்
இந்தியாவை உலக வெளிச்சத்தில் தக்க வைத்துக் கொள்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக