இளவரசர் ஆண்ட்ரூ கைது: பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பின்னணியும் எப்ஸ்டீன் விவகாரமும்

"படம் உதவி: விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons)"


பிரிட்டிஷ் அரச குடும்பம் என்பது உலக வரலாற்றில் தொன்மையான மற்றும் செல்வாக்கு நிறைந்த குடும்பங்களில் ஒன்றாகும்.  கண்ணியம் மற்றும் மரபுகளின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வந்த இந்த குடும்பத்தில்
சரியாக 2026 பிப்ரவரி 20 அன்று லண்டனில் அரங்கேறிய ஒரு நிகழ்வு
அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் நடுநடுங்க வைத்தது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரர், இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor), லண்டன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.இது வெறும் ஒரு தனிநபர் கைதாக மட்டும் பார்க்காமல் பிரிட்டிஷ் முடியாட்சியின் அடித்தளத்தையே உலுக்கியுள்ள ஒரு வரலாற்றுச்சம்பவமாக கருதப்படுகிறது.
1.கைதின் பின்னணியும்?எப்ஸ்டீன் விவகாரமும்?
பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீதான சர்ச்சைகள் இன்று நேற்று நடந்ததல்ல தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்த வண்ணம் உள்ளது.அமெரிக்கத் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்  (Jeffrey Epstein) உடனான இவரது நெருங்கிய Epstein Files  நட்பு பின்னாளில் இவருக்கு பேராபத்தாக மாறப்போகிறது என இளவரசர் ஆண்ட்ரூ எதிர்பார்க்கவில்லை.
எப்ஸ்டீன், இளம் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலேயே
தற்கொலை செய்துகொண்டவர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில், வர்ஜீனியா கிஃபெரே (Virginia Giuffre) என்ற பெண், தான் சிறுமியாக இருந்தபோது இளவரசர் ஆண்ட்ரூவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக 
முதன் முதலில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.அப்போது அந்த வழக்கில் இருந்து தப்பிக்க இளவரசர் ஆண்ட்ரூ
பல மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கினார்.மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டார்.இருப்பினும் இந்த வழக்குகள் அவர் மீதான கரையை நீக்கவில்லை.
2.அடுக்கி வைக்கப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளும் கைது நடவடிக்கையும்;
தற்போது 2026-ல் நடந்துள்ள இந்தக் கைது நடவடிக்கை பேசு பொருளாக உள்ளது! இதற்கு மிக முக்கியமான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1.அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல்:
எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சாதகமாகச்
செயல்பட தனது பதவி(வர்த்தகத்தூதர்) 
மற்றும் அரச குடும்ப செல்வாக்கை தவறாக பயன்படுத்திக் கொண்டார் என
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2.நிதி மோசடி மற்றும் ஊழல்:
எப்ஸ்டீன் பைல்ஸ் மூலம் பெறப்பட்ட
இளவரசர் ஆண்ட்ரூ உடனான சில நிதி பரிமாற்றங்கள் சட்டவிரோதமான பணப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் கண்டறியப்பட்ட சில ரகசிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
3.நீதித்துறைக்கு இடையூறு செய்தல்:
கடந்த விசாரணைகளின் போது அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை வழங்கியதும், உண்மைகளை மறைக்க முயன்றதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3.மன்னர் சார்லஸின்  இக்கட்டான சூழல்:
மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவியேற்ற முதலே  தனது அரச குடும்பத்தைச் சுருக்கி (Slimmed-down Monarchy),மெலிந்த முடியாட்சி 
 முறையை பின் தொடர்ந்தார்.இதன் நோக்கம் முக்கியமான பதவிகளில் அரசு வாரிசுகள் அமர்த்தப்படுவதன் மூலம் அரசு செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதே!
இதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தப் போராடி வருகிறார்.ஆனால், தனது சொந்த சகோதரரே இத்தகைய கிரிமினல் வழக்கில் சிக்கியிருப்பது அவருக்குப்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஆண்ட்ரூவின் ராணுவ பட்டங்கள் மற்றும் 'அரசு மரியாதைகள்' (HRH title) அதிகாரப்பூர்வமாக பறிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரச குடும்பத்தின் மீதான மக்கள் கருத்தை (Public Opinion) மோசமாகப் பாதிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இதில் மன்னர் சார்லஸ் "சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்" என்று கொள்கையில் பிடிப்போடு உள்ளார்.எனவே தனது சகோதரருக்கு ஆதரவாக எந்தத் தலையீடும் செய்யப்போவதில்லை என்று பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4.இனிமேலும் அரசு குடும்பம் தேவையா?
 பிரிட்டனில் தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சூழலில், அரசு குடும்பத்தின் பராமரிப்பதற்காக பெரும் அளவு வரிப்பணம் செலவிடப்படுகிறது .
இது குறித்த விவாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்படுகின்றன.இந்தச் சூழலில், ஒரு இளவரசர் குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பது, குடியரசு ஆதரவாளர்களுக்கு (Republicans) புதிய பலத்தைத் தந்துள்ளது.
 "இனிமேலும் அரச குடும்பம் தேவையா?"என்ற கோஷங்கள் லண்டன் வீதிகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
5.சர்வதேசத் தாக்கம்:
இதனை வெறும் பிரிட்டன் உள்நாட்டு விவகாரமாக கடந்து செல்ல முடியாது.
ஏனெனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பிரிட்டன் வைத்துள்ள உறவுகளிலும் இது பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும். 
குறிப்பாக, எப்ஸ்டீன் விவகாரம் அமெரிக்காவிலும் பெரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒன்று என்பதால்,அமெரிக்க புலனாய்வு இதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.
6.சட்டப் போராட்டமும் எதிர்காலமும்:
இளவரசர் ஆண்ட்ரூ தற்பொழுது லண்டனில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். 
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலையில் பிரிட்டிஷ் வரலாற்றில் சிறைத்தண்டனை பெறும் முதல் நவீனகால அரச குடும்ப உறுப்பினர் அவராகவே இருப்பார்.இது முடியாட்சியின் எதிர்காலத்தை மாற்றி எழுத கூடிய ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7.முடிவுரை:
அதிகாரமும் அந்தஸ்தும் ஒரு அரச குடும்ப உறுப்பினரை எப்படி திசை திருப்புகிறது.என்பதற்கு இளவரசர் ஆண்ட்ரூவின் வாழ்க்கை சாட்சி.
ஒரு பக்கம் அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை பேணி காப்பது!
மற்றொரு பக்கம் சட்டத்தின் கடமையை நிலைநாட்டுவது!இந்த இரண்டுக்கும் இடையில் பிரிட்டன் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது.
எனது பார்வையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
 
வாசகர் களம்?
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள், நவீன காலத்திற்கு அவசியமானவை என்று நீங்கள் கருதுகிறீர்களா?



கருத்துகள்