Trump president of America 🇺🇸
"படம் உதவி: விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons)"
உலக வல்லரசான அமெரிக்க அரசியலின் களம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து
சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதிய மற்றும் அதிரடியான மாற்றத்தை அமெரிக்க அரசு சந்தித்து வருகிறது.டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாம் முறை பதவியேற்பிற்குப் பிறகு, அமெரிக்கா தனது "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) கொள்கையை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.இதன் விளைவாக உள்நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
வர்த்தகப் போரும் வரி விதிப்புகளும்: (Tariffs)
தற்போதைய அமெரிக்க அரசியலின் மிக முக்கிய அம்சமாகத் திகழ்வது அதன் வரி விதிப்புக் கொள்கை ஆகும்.இதன் மூலம் அமெரிக்கா தனது உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்க மற்றும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் சீனா, கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 50% (Tarriff)வரை அதிரடி வரி விதிப்புகளை அமல்படுத்தியது.
முக்கிய காரணங்கள் இதோ:
1 "பரஸ்பர வரி" (Reciprocal Tariffs) கொள்கை:
பல நாடுகள் அமெரிக்கத் தயாரிப்புகள் மீது அதிக வரி விதிப்பதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த 50% வரை வரி உயர்த்தப்படுவதாகவும்
அமெரிக்க அரசு தரப்பில் முன்வைக்கப்படுகிறது.
2. ஃபெண்டானில் (Fentanyl) கடத்தலைத் தடுத்தல்:
அமெரிக்காவில் 'ஃபெண்டானில்' எனும் உயிருக்கு ஆபத்தான போதைப் பொருளின் உபயோகம் அதிகரித்துள்ளது.இதைத் தடுக்கத் தவறியதற்காகவும், கடத்தல்காரர்களுக்கு முட்டுக் கட்டை போடாததற்காகவும் சீனா மீது தண்டனை வரியாக (Punitive Tariff) இது விதிக்கப்படுகிறது.
3. சட்டவிரோதக் குடியேற்றம்:
அமெரிக்காவின் எல்லை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு 25% முதல் 50% வரை வரி
விதிக்கப்பட்டுள்ளது.இந்த வரிச் சுமையின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் நடக்கும் சட்டவிரோதக் குடியேற்றத்தை அந்த நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்து வருகிறது.
4. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்:
அயல் நாட்டுப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதினால் உள்நாட்டு பொருட்களின் விலை குறையும்.இதன் மூலம் உற்பத்தி பெருகும் என டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நம்பப்படுகிறது.
5.வர்த்தகப் பற்றாக்குறையைச் சமன் செய்தல்:அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட, அதிகப்படியான இறக்குமதியையே சார்ந்திருக்கிறது. குறிப்பாக, சீனாவுடனான வர்த்தகப் போட்டியால் அமெரிக்கா பெரும் வர்த்தகப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான வரி விதிப்புகள் அமல்படுத்தப்படுகின்றன.
ஐ.நா சபைக்கு போட்டியா?
"படம் உதவி: விக்கிமீடியா காமன்ஸ் (Wikimedia Commons)"
உலக பாரம்பரிய சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபைக்கு போட்டியாக அமெரிக்கா தற்போது '
Board of Peace' (BoP) என்ற புதிய சர்வதேச அமைப்பைத் தொடங்கியுள்ளது. இது நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தீர்ப்பதற்கும் உலக அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பாகக் கருதப்படுகிறது. அண்மையில் இந்த அமைப்பில் இணைய முப்பது நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஐநா சபையின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்கள்;இந்த வரி விதிப்பின் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்துள்ளது.ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பத்திற்கு ஆண்டுக்கு சுமார் $1,300 வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக (Yale Budget Lab )யேல் பட்ஜெட் ஆய்வகம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியானது.
மத்திய வங்கி (Federal Reserve) அழுத்தம்: வட்டி விகிதத்தை குறைக்க கோரி மத்திய வங்கிக்கு தொடர்ந்து அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது .மத்திய வங்கி அரசால் நியமிக்கப்பட்டாலும் இது ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகிறது.இது உலக அளவில் அமெரிக்காவின் நிதி சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய வங்கியின் சவால்கள்:வட்டி விகிதங்களைக் குறைத்தால் மக்களுக்குக் கடன் எளிதாகக் கிடைக்கும், ஆனால் அது மீண்டும் விலைவாசி உயர்வுக்கு (பணவீக்கம்) வழிவகுக்கும். இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையைப் பேணுவதே மத்திய வங்கியின் சவாலாக உள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு:அமெரிக்கா தனது இராணுவ வலிமையைப் பெருக்க செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கணினிகளில் அதிக முதலீடு செய்து வருகிறது. போர்க்களத்தில் தன்னாட்சி முறையில் இயங்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுடனான தொழில்நுட்பப் போட்டியில் அமெரிக்கா முன்னிலை வகிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுரை:
2026-ல் அமெரிக்க அரசியல் என்பது ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலில் இருந்து விலகி, தீவிர தேசியவாதக் கொள்கைகளை நோக்கி அமெரிக்கா பயணிப்பது, உலக நாடுகளைத் தனது வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் நீண்ட கால அடிப்படையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா அல்லது சர்வதேச அளவில் அதன் செல்வாக்கைக் குறைக்குமா என்பது வரும் காலத்தில்தான் தெரியவரும்.
வாசகர் களம்:
அமெரிக்காவின் இந்த 'தனித்துவமான தேசியவாதக் கொள்கை' (America First) உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய தொடக்கமா அல்லது உலக நாடுகளிடையே விரிசலை உண்டாக்கும் ஒரு தடையா? உங்கள் கருத்து என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக