மீண்டும் ஒரு பனிப்போரா? – New START ஒப்பந்தம் காலாவதி: உலகிற்கு ஆபத்தா?

Munich Conference


முன்னுரை:

உலகம் இப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக அணு ஆயுதப் பேரழிவில் இருந்து நம்மை காப்பாற்றி வந்த 'NEW START' ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது."மேலும் இதன் மூலம் உலகத்தில் ஒரு போர் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.
"New START" ஒப்பந்தம்:
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே
நிலவிய அணு ஆயுதப் போட்டியை ஒரு கட்டுக்குள் கொண்டு வர உருவாக்கப்பட்டதே 
  'New start' ஒப்பந்தம்.
நியூ ஸ்டார்ட் ஒரு பார்வை:
உலக நாடுகள் அமைதியை நோக்கிப் பயணிப்பதாகத் தோன்றினாலும், அடியாளத்தில் அணு ஆயுதப் போட்டி என்பது இன்னும் தணிந்தபாடில்லை. இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே எஞ்சியிருக்கும் ஒரே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் 'நியூ ஸ்டார்ட்' (New START - Strategic Arms Reduction Treaty) ஆகும்.
ஒப்பந்தத்திற்கான கையெழுத்து:
கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செக் குடியரசின் பிராக் (PRAGUE) நகரில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கையெழுத்திற்கான நோக்கம்:
பனிப்போர் காலத்திற்குப் பிறகு இரு நாடுகளும் தங்களின் அணு ஆயுதக் கிடங்குகளைக் குறைத்து, உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய இலக்காகும்.
ஆயுதக் குறைப்பு: 
 இரு நாடுகளும் தங்களின் அணு ஆயுதத் தலைப்புகளின் (Warheads) எண்ணிக்கையை 1,550 ஆகக் குறைக்க வேண்டும்.
ஏவுகணை கட்டுப்பாடு: 
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs) மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை 700 ஆகக் குறைக்க வேண்டும்.
பரஸ்பர ஆய்வு:  
ஒரு நாடு மற்றொரு நாட்டின் அணு ஆயுதத் தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும். இது ஒருவருக்கொருவர் நம்பிக்கையை உருவாக்க உதவுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகள்:
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசு நாடுகளின் அணு ஆயுத தலைப்புகள்(Nuclear Warheads)1,550 க்கு மேல் வைத்திருக்கக் கூடாது.ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்.என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வெளிப்படைத்தன்மை:
இதன் மூலம் ஒரு நாடு மற்றொரு நாட்டின் அணு ஆயுத தளங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யலாம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
முறிவிற்கான காரணம்: (உக்ரைன் போர்)
இந்த ஒப்பந்தம் 2021 முதல் 2026 வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால், 2022-ல் தொடங்கிய உக்ரைன் போர்
 நிலைமையை மாற்றியது.
நேரடி மோதல்:
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ(NATO) நாடுகள் ஆயுதங்கள் வழங்கி ரஷ்யவை தோற்க முயல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.இதனால்"எங்களைத் தோற்கடிக்க முயலும் ஒரு நாட்டிற்கு, எங்களது அணு ஆயுதத் தளங்களைச் சோதிக்க அனுமதி வழங்க முடியாது"என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஒப்பந்தம் நிறுத்தம் (Suspension):
2023-ல்   அதிபர் விளாடிமிர் புடின், "ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவில்லை ஆனால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக (Suspend) அறிவித்தார்."
இறுதி முடிவு (2026):
ஒப்பந்தத்தின் காலக்கெடு தற்போது நிறைவடைந்தது .உக்ரைன் போரில் நிலவும் பதற்றம் காரணமாக இதுவரை எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடக்காததால் இந்த ஒப்பந்தம் தற்சமயம் அதிகாரப்பூர்வமாக முற்றுப்பெற்று உள்ளது.
தற்போதைய நிலை:
தற்போது இந்த ஒப்பந்தம் இல்லாததால், இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்ற அபாயகரமான சூழல் நிலவுகிறது. இது ஜியோ-பாலிட்டிக்ஸ் தளத்தில் ஒரு "ஆயுதப் போட்டி 2.0"-விற்கு வித்திட்டுள்ளது.
இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்:
ஆயுதப் போட்டி: 
இனி இந்த இரண்டு நாடுகளும் தடையின்றி எவ்வளவு ஆயுதங்கள் வேண்டுமானாலும் உற்பத்தி செய்து கொள்ளலாம்.இதனால் ஒருவித போர் சூழல் உருவாகும்.
கண்காணிப்பு இன்மை: 
மேலும் இந்த ஒப்பந்தம் ரத்தானதால் ஒரு நாடு மற்ற நாட்டை உளவு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும், இது ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தும்.
ரஷ்யாவின் நிலைப்பாடு: ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் பங்கு:
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் இல்லாத நிலையில் இதனை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆயுதங்களை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்தியா மீதான தாக்கம்:
வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதப் போட்டி அதிகரித்தால், அது தெற்காசியப் பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா தனது 'முதலில் பயன்படுத்தக் கூடாது' (No First Use) என்ற கொள்கையில் உறுதியாக இருந்தாலும், சர்வதேசப் பாதுகாப்புச் சூழல் மாறுவது இந்தியாவின் வியூகங்களில் மாற்றத்தைக் கோருகிறது.
முடிவுரை:
இந்த ஒப்பந்தத்தின் வீழ்ச்சி உலக அமைதிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும்.உலக அமைதிக்காக கட்டாயம் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.போர் ஒரு நியாயமான முடிவாக இருக்காது.
வாசகர் களம்:

"வல்லரசுகளின் அணு ஆயுதப் போட்டி, அமைதியான உலகிற்கு வழிவகுக்குமா? அல்லது இது 3-வது உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்துகிறதா? உங்கள் மேலான கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்!"

உங்கள் பதிலுக்காக என் விரல்கள் காத்திருக்கிறது!

கருத்துகள்