ஐரோப்பாவின் இளம் புயல்: ராப் ஜெட்டன் - ஒரு அரசியல் பார்வை!

படம் உதவி: விக்கிப்பீடியா காமன்ஸ் (Wikimedia Commons)
நெதர்லாந்தில் ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றிலேயே ஓர் புதிய சகாப்தத்தை எழுதியுள்ள ஓர் இளம் பிரதமர் ராப் ஜெட்டன் (Rob Jetten) பற்றிய விரிவான கட்டுரை இதோ.
முன்னுரை:
ஐரோப்பாவின் பொருளாதார ரீதியாக முக்கிய நாடுகளில் ஒன்றாக கருதப்படும் நெதர்லாந்து, தற்போது ஒரு வரலாற்று திருப்பத்தை கண்டுள்ளது.
மேலும் அந்நாட்டின் நீண்ட காலம் பிரதமராக இருந்த மார்க் ரூட்டேவின்


(Mark Rutte)
பதவி விலகலுக்குப் பிறகு
"ராப் ஜெட்டன்" இளம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். தற்போது 38 வயதே ஆன இவர் அந்நாட்டின் உயரிய பதவியை அடைவது நவீன ஐரோப்பாவின் முற்போக்கு சிந்தனைகளுக்கும், சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
"ராப் ஜெட்டன்" கடந்து வந்த பாதை:
 ராப் ஜெட்டன் மார்ச் 25, 1987 அன்று
நெதர்லாந்தின் பழமையான நகரங்களில் ஒன்றான நிஜ்மேகன் (Nijmegen) எனும் நகரில் பிறந்தார்.சாதாரண ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்த இவர்,இளம் வயது முதலே சமூகப்
 பிரச்சனைகளில் ஆர்வம் காட்டினார்.
தனது கல்லூரி பருவத்தில் ராட்பவுட் பல்கலைக்கழகத்தில் (Radboud University)பொது நிர்வாகம் (Public Administration) பிரிவில் கல்வி பயின்றார்.தனது மாணவர் பருவத்தில் அரசியல் மீதான அதீத ஆர்வத்தால் நெதர்லாந்தின் சமூக தாராளவாதக் கட்சியான 'D66' (Democrats 66) கட்சியில்
தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.
அரசியலும்: வளர்ச்சியும்:
ஜெட்டனின் இந்த அரசியல் பயணம் என்பது விரைவானது மட்டுமல்ல சுவாரஸ்யமானது கூட! 
ராப் ஜெட்டன் சரியாக 2017-ஆம் 
ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 
போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம்  டச்சு நாடாளுமன்றத்தின் கீழவைக்கு (Tweede Kamer) உறுப்பினராகத் தனது முப்பது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் துடிப்பான விவாதங்கள் பலரையும் கவர்ந்தது.
A.  ஓராண்டில் உயர் பதவி: 
  நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற ஒரே ஆண்டிலேயே, தனது கட்சியான D66 (Democrats 66)-ன் உயரிய பதவியான
நாடாளுமன்றக் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்தில் கட்சியின் நிலைப்பாடுகளை முன்வைப்பதும், சட்ட மசோதாக்கள் குறித்துப் பேசுவதும் இவரது முக்கியப் பணியாக இருந்தது.
B.   அமைச்சராக புதிய பரிணாமம்!:
படம் உதவி: விக்கிப்பீடியா காமன்ஸ் (Wikimedia Commons)
(டச்சு காலநிலை மற்றும் எரிசக்தி கொள்கை அமைச்சர் ராப் ஜெட்டன் மற்றும் டச்சு காலநிலை தூதர் இளவரசர் ஜெய்ம் டி போர்பன் டி பார்மே ஆகியோருடன் காலநிலை தூதர்)
2021-ல் மார்க் ரூட்டேவின் D66 (Democrats 66) அமைச்சரவையில் காலநிலை மற்றும் எரிசக்தி துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.அமைச்சராக நாடாளுமன்றத்தில் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் விளக்கம் தருவது புதிய சுற்றுச்சூழல் சட்டங்களை அவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவது .என நாடாளுமன்றத்துடனான இவரது தொடர்பு அடுத்த கட்டத்திற்குச் சென்றது.
C.தற்போதைய பிரதமர் அவதாரம்:
ராப் ஜெட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள தற்போதைய சூழலில்
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தலைவராக (Head of Government) செயல்படுகிறார்.டச்சு அரசியல் விதிமுறைப்படி பிரதமர் நாடாளுமன்றத்திற்கு முதன்மையானவர்.மேலும் அமைச்சரவையின் முடிவுகளை நாடாளுமன்றத்தில் தற்காத்துப் பேசுவதும், பெரும்பான்மையை நிரூபிப்பதும் இவரது தலையாயக் கடமையாக உள்ளது.
கொள்கைகளும் லட்சியங்களும்:
இவர் தன்னை ஒரு முற்போக்கு தாரளவாதி என அடையாளம் காட்டிக் கொள்கிறார்.அவரது அரசு முக்கியமாக நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
A.  பசுமைப் புரட்சி (Green Revolution):
நெதர்லாந்தை 2050-க்குள் கார்பன் சமநிலை கொண்ட நாடாக மாற்றுவதே
இவரின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.இதற்கான நடவடிக்கையாக
பழைய நிலக்கரி ஆலைகளை மூடுவது பற்றி குறித்தும் புதுப்பிக்கக் கூடிய வளங்களான காற்று மற்றும் சூரிய ஆற்றலில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறார்.
 B.  கல்வி சீர்திருத்தம்:
மாணவர்களுக்கான கல்வி கடன் திட்டங்களை மறு சீரமைப்பது மற்றும் தரமான கல்வியை அனைவருக்கும் கட்டாயம் உறுதி செய்வது குறித்து உறுதியாக உள்ளார்.
C.ஐரோப்பிய ஒன்றிய ஒருமைப்பாடு:
ஐரோப்பிய ஒன்றியத்தில் நெதர்லாந்து ஒரு "உறுதியான சக்தியாக" திகழ வேண்டும்.மேலும் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவும்,வர்த்தக உறவை மேம்படுத்துவதும் இவரின் நோக்கமாகும்.
D.சமூக நீதி:
தன் பாலின சமத்துவம் மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ+) சமூகத்தினரின் உரிமைகளை மீட்டெடுக்கவும்,அவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும்,தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.மேலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்கொள்ளும் சவால்களும்: நெருங்கி வரும் நெருக்கடிகளும்.
ராப் ஜெட்டன் இளம் வயதிலேயே பிரதமராக பதவியேற்று உள்ளதால்
அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களை 
எதிர்கொள்ள வேண்டும்.மேலும் நெதர்லாந்தில் தற்போது அதிகரித்து வரும் குடியேற்றப் பிரச்சனைகள் (Migration issue)மற்றும் அடிப்படை உரிமையான வீட்டு வசதி தட்டுப்பாடு
ஆகியவை அவருக்கு பெரும் சவாலாக உள்ளன.அங்கு நிலவி வரும் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே "நைட்ரஜன் உமிழ்வு"தொடர்பான மோதல் போக்கை ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டு வருவது இவர் தலைமையில் உள்ள அரசின் தலையாயக் கடமையாகும்.
"கால்நடை வளர்ப்பைக் குறைக்கச் சொல்லும் அரசாங்கத்தின் விதிமுறைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர்"
உலக அரங்கில் தாக்கம்:
ஜெட்டனின் இந்தப் பிரதமர் பதவி ஐரோப்பா முழுவதும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் போன்ற இளம் தலைவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்த இவர் திட்டமிட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரால் உச்சத்தை தொட்ட கச்சா எண்ணையின் விலை உயர்வை கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முடிவுரை:
ராப் ஜெட்டன் வெறும் ஒரு இளம் பிரதமர் மட்டுமல்ல அவர் மாற்றத்தின் திறவுகோல்."வயது என்பது எண்களை மட்டுமே சார்ந்தது,செயல்திறனை அல்ல!"
என்பதை நிரூபித்துள்ளார்.தன்பாலின 
ஈர்ப்பின் காரணமாக  சாமானியன் கூட சாதாரணமாக வாழ முடியாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பிரதமராக சாதித்துள்ளது அந்த சமூகத்தின் நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது.

கருத்துகள்