"2026-ல் பற்றி எரியும் துராந்த் எல்லை: ஒரு மனிதாபிமானப் பார்வை"

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் 
("Image Source: Wikimedia Commons")
தெற்காசியாவின் இரண்டு முக்கிய அண்டை நாடுகளாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும்,இடையே ஏற்பட்டுள்ள விரிசல் பல தசாப்தங்களாகவே ஒரு "கண்ணாமூச்சி ஆட்டம்" 
போல் இருந்து வருகிறது.2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது,பாகிஸ்தான் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் தற்போது 2026-ல் இந்தச் சூழல் முற்றிலும் தலைகீழாக மாறி உள்ளது.இன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது தெற்காசியாவின் அமைதிக்கு ஒரு சவாலாக இருக்கிறது.
1.தாலிபான்கள் தொடக்கமும்: வரலாற்று பின்னணியும்.
  தாலிபான்கள் என்பது ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத மற்றும் அரசியல்
அமைப்பாகும்.தாலிபான் என்ற வார்த்தைக்கு பஷ்டூ மொழியில்
"மாணவர்கள்"என்று அர்த்தம்.பஷ்டூ
என்பது ஆப்கானிஸ்தானில் பரவலாக பேசக்கூடிய மொழிகளில் ஒன்று.
A. தோற்றம்;
  ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக 1990-களின் தொடக்கத்தில்,இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
B. அமைப்பின் பின்னணி;
  "சோவியத் யூனியன்"-ஆன "ரஷ்யா" ஆப்கானிஸ்தானை விட்டு விலகிய போது ஆட்சி அதிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது.அப்போது "முல்லா முகமது ஒமர்" தலைமையில் அங்கு நிலவிய குழப்பத்தை பயன்படுத்தி மதப் பள்ளிகளில் (மதரஸாக்களில்) பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து
"தாலிபான்" என்ற அமைப்பை உருவாக்கினார்.
C.  தாலிபானின் கொள்கைகள்:
  C1) தாலிபான்கள் தங்கள் நாடான ஆப்கானிஸ்தானை "இஸ்லாமிய அமீரகம்" என்று அழைத்துக் கொண்டனர்.
  C2) இவர்கள் இஸ்லாமிய சட்டமான 'ஷரியா' சட்டத்தை பின்பற்றினார்.மேலும் இச்சட்டத்தை கடுமையான முறையில் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
D. ஆட்சியின் காட்சிகள்:
   தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டு முறை கைப்பற்றின.
D1. முதல் ஆட்சிக் காலம் (1996 - 2001)
   1990-களின் நிலவிய உள்நாட்டு போரின் குழப்பத்தால் தாலிபான்கள் உருவெடுத்தனர்.1996-ல் காபூலைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தனர்.
சட்டங்களும் :தண்டனையும்.
  இஸ்லாமிய ஷரியா சட்டத்தை தாலிபான்கள் மிக தீவிரமாக கடைபிடித்தனர்.பொது இடங்களில் "மரண தண்டனை" மற்றும் "கசையடி" கொடுப்பது போன்ற கொடூர தண்டனைகளை அரங்கேற்றினார்.
முடங்கப்பட்ட பெண்கள் வாழ்க்கை:
  பெண்கள் கல்வி பயிலவும், வேலைக்குச் செல்லவும்,முழுமையாக மறுக்கப்பட்டது.வீட்டை விட்டு வெளியே வரும்போது 'புர்கா' அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
கலை மற்றும் பொழுதுபோக்கு:
  மக்களின் அன்றாட பொழுதுபோக்கான
இசை, சினிமா மற்றும் புகைப்படங்கள் எடுப்பது போன்றவை முற்றிலும் மறுக்கப்பட்டது.இவை 'இஸ்லாத்திற்கு எதிரானது' என அவர்கள் கருதினர்.
முடிவு;
 சரியாக 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் தீவிரவாத தாக்குதலுக்கு உடந்தையான "ஒசாமா பின்லேடனுக்குத்"தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் தொடுக்க காரணமாக அமைந்தது.
D2. இரண்டாம் ஆட்சிக் காலம் (2021 - தற்போது வரை)
 20 ஆண்டுகள் அமெரிக்க படைகளுடன் தாக்குப் பிடித்த தாலிபான்கள், சரியாக
2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றவுடன் 
மீண்டும் அதே வேகத்தில் ஆட்சியைப் பிடித்தது.
ஆரம்ப கால வாக்குறுதிகள்:
   தாங்கள் திருந்தி விட்டதாகவும்,
பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அளித்தனர்.
வாக்குறுதியின் தன்மை:
     ஆனால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்தன.பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்குச் செல்லக்கூடாது.மேலும் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்ல தடைகள் விதிக்கப்பட்டன.
பொருளாதார நிதி நெருக்கடி:
உலக நாடுகள் தாலிபான் அரசை அங்கீகரிக்காததால் அந்நாட்டின் நிதி நெருக்கடி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இதனால் பஞ்சம் மற்றும் பசி பரவலாக நிலவுகிறது.
ஒரு காலத்தில் தங்களுக்கு உதவியாக இருந்த பாகிஸ்தான் உடனேயே தற்போது தாலிபான்கள் எல்லையில் போரிட்டு வருவது இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை அதிகரிக்கிறது.
2.    வரலாற்றுப் பின்னணியும்: எல்லைச்சண்டையும்.(Durand Line)
  இந்த மோதலின் மூல காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் 1893-ஆம் ஆண்டு 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரையப்பட்ட
பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் அன்றைய ஆப்கானிஸ்தான் அமீருக்கும் இடையே "டியூரண்ட் கோடு"
(எல்லைக்கோடு) வரையப்பட்டது.
"Image Source: Wikimedia Commons"
இந்த எல்லை ஒப்பந்தத்தை, இன்றைய ஆப்கானிஸ்தான் அரசு ஏற்க மறுக்கிறது.
2. (A) மறுப்பதற்கான காரணங்கள்
   இந்த டியூரண்ட் கோடு பஷ்டூன் இன மக்களை இரண்டாகப் பிரித்தது.
B. தாலிபான் நிலைப்பாடு:
  பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு இது எப்படி செல்லும்? மேலும் இது ஒரு தற்காலிக ஒப்பந்தமாக அவர்கள் வாதாடினர்.
​C. பாகிஸ்தான் நிலைப்பாடு: 
 இது "சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு பிரித்தளிக்கப்பட்ட
ஒரு எல்லை"என்பது பாகிஸ்தானின் பிடிவாதம்.
  இரு நாடுகளுக்கே இடையே ஏற்பட்டுள்ள இந்த அடிப்படை சிக்கல்
அப்பாவி மக்களின் இரத்தக் கரையில்
எழுதப்பட்டுள்ளது மறுக்கத்தக்கதல்ல.
3. தற்போதைய சூழலும்: மோதலுக்கான முக்கிய காரணமும்(2026)
  மூன்று முக்கிய காரணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
A. தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பு:
   தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட
பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து பாகிஸ்தானை தாக்கி வரும் நிலையில்
இந்த அமைப்புக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுப்பது பாகிஸ்தானை மேலும் எரிச்சல் ஊட்டுகிறது.
B. வான்வழித் தாக்குதல்கள்:
  பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தியது."பயங்கரவாத முகாம்கள்" என்ற பெயரில் நடத்திய இந்த தாக்குதல்
தாலிபான் அரசை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
C.  எல்லை வேலிகள்:
பாகிஸ்தான் எல்லையில் அமைக்கும் முள்வேலிகளைத் தாலிபான் வீரர்கள்
சேதப்படுத்துவதும்,அதைத் தடுக்க முனையும் பாகிஸ்தான் வீரர்கள் மீது 
பயங்கர தாக்குதல் நடத்துவதும் மோதல் போக்கை தீவிர்படுத்தி உள்ளது.
4.போர் பதற்றத்தின் கள நிலவரம்:
பிப்ரவரி 2026-ல், எல்லைப் பகுதியில்
பாகிஸ்தான் ராணுவச் சோதனைச் சாவடிகள் 15- க்கும் மேற்பட்டவை
தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது.
இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தனது கனரக பீரங்கிகளையும், நவீன போர் விமானங்களையும் எல்லைக்குள் பலப்படுத்தி உள்ளது.
       கணிப்பு; ஒருவேளை போரின் தீவிரம் அதிகரித்தால் அது இரு நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து விடும் .தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது ஒரு தற்கொலைக்கு சமமான முடிவாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
5. "மனிதாபிமானம்" ஓர் பார்வை;
 இந்தப் போரை அரசியல் லாபங்களாக
பார்ப்பதை விட அங்கு வசிக்கும் சாமானியர்களின் துயரம் பெரும் கவலையை அளிக்கும்.
A. புலம்பெயர்வு:
 எல்லையோர கிராமப்புறங்களில் வசிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றன.
Bபெண்கள் மற்றும் குழந்தைகள்:
 ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான கட்டுப்பாட்டில்
இந்தப் போர் பேரிடியாக மாறியுள்ளது.
C. "பசி "போர்:
ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 70 சதவீதம் 
பாகிஸ்தான் எல்லைகள் ஆன கராச்சி மற்றும் காசிம் (Karachi & Qasim) துறைமுகங்களையே சார்ந்துள்ளது.தற்பொழுது பாகிஸ்தான் இந்த வழியை தடை செய்துள்ளது.
மனிதாபிமானம் அடிப்படையில் இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த 70% விநியோகத் தடை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பை உடைப்பதற்கு சமமாகும்.மேலும் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் விண்ணைத் தொட்டுள்ளது சாமானியர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
6. உலக நாடுகளின் எதிர்வினை:
A. இந்தியா:
 1) இந்தியா தனது எல்லையில் நடக்கக்கூடிய மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.பிராந்திய அமைதியே இந்தியாவின் முதன்மை இலக்கு.
2) சீனா: பாகிஸ்தானில் அதிகப்படியான முதலீடுகளை(CPEC) (China-Pakistan Economic Corridor)தன்னுள் வைத்துள்ள சீனா,இந்த மோதலை கட்டுப்படுத்த
தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை செய்து வருகிறது.
3.அமெரிக்கா: அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
தீர்வு என்ன?
போர் இழப்புகளை மட்டுமே தரும் தீர்வுகளை அல்ல.
1.முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை:
சீனா அல்லது ஐநா சபையின் முன்னிலையில் இரு நாடுகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் போரினை தவிர்க்கலாம்.
2.​பயங்கரவாதக் கட்டுப்பாடு:
தனது மண்ணில் இருந்து மற்ற நாடுகளை கண்மூடித்தனமாக தாக்கக்கூடிய தீவிரவாத செயலை
தாலிபான் அரசு முற்றிலும் தடுக்க வேண்டும்.
3.பொருளாதார ஒத்துழைப்பு:
பொருளாதார ரீதியாக சோர்ந்து உள்ள இரு நாடுகளும் தங்கள் எல்லைகள் மூடுவதை தவிர்த்து வர்த்தகத்திற்காகத் திறப்பதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர லாபம் மற்றும் பலன்கள் பெற முடியும்.
முடிவுரை:
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் தெற்காசிய பிராந்தியத்தில் நிலைகுலைய செய்துள்ளது.இதை அரசியலாக பார்ப்பதை விட மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் கூட.போரின் இறப்புகளை விட கொடியது பசி.
வாசகர் களம்:
அரசியல் காரணங்களுக்காக எல்லைகள் மூடப்படும்போது, அங்குள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் அடிப்படை உணவுத் தேவையும் மருத்துவமும் பாதிக்கப்படுவது நியாயமா?

கருத்துகள்