அமெரிக்கா - பாகிஸ்தான் நெருக்கம்: இந்தியாவிற்கு பின்னடைவா?


உலக அரசியலில் பகடைக்காய் போல் தங்களை அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகின்றன.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"என்ற சிலப்பதிகார வரிகளை மறந்து வன்மம்,பொறாமை,
வஞ்சகம்,ஆணவம்,போன்ற அழிவின் ஆயுதத்தை கையில் எடுத்து அரசியல் நடத்தி வருகின்றன.தமிழில் பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள் "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை",இந்த பழமொழிக்கு இணங்க அமெரிக்க பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா பாகிஸ்தான் உறவுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் அதிரடி மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 

1. அமெரிக்கா பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய பரிணாமம்.
        கடந்த காலங்களில் பாகிஸ்தான் "பயங்கரவாத குழுக்களை" ஒழிப்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நிதி உதவி பெற்றுக் கொண்டு, அதே சமயம் தங்களுக்கு சாதகமான பயங்கரவாத குழுக்களை
மறைமுகமாக வளர்க்கும் "இரட்டை வேடத்தை" கண்டித்து அமெரிக்கா தனது இராணுவ உதவிகளை நிறுத்தி வைத்திருந்தது.ஆனால் 2026-ன் தொடக்கத்தில் இந்த நிலை முற்றிலும் மாறி உள்ளது.

A.இராணுவ ஒத்துழைப்பு:
         ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானில் "தாலிபான்களுடனான மோதல்" மறுபக்கம் "ஈரான் உடனான பதற்றம்"
போன்ற காரணங்களால் அமெரிக்கா பாகிஸ்தானை ஒரு முக்கிய ராணுவ கூட்டாளியாக பார்க்கத் தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். இது இரு நாடுகளின் நெருக்கத்தை பிரதிபலிக்கிறது.மேலும் அதிபர் பாகிஸ்தான் உடனான ஆதரவை வெளிப்படுத்தினார்.
"பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக எந்த ஒரு தாக்குதலையும் நடத்த முழு உரிமை உண்டு"என்று அவர் குறிப்பிட்டார்.

B.ட்ரம்ப்பின் மத்தியஸ்த உரிமைகோரல்:
    கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) மோதலின் போது,தான் தலையிட்டு அணு ஆயுதப் போரை தடுத்த தாகவும்,நான் தலையிடவில்லை என்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்றும் டிரம்ப் பொதுவெளியில் தொடர்ந்து கூறி வருகிறார்.

   1.டிரம்பின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு.
அனாவசியமான தலையீடு"சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு உட்பட்டது. மேலும் டிரம்ப்பின் இந்த பேச்சை இந்தியா தேவையற்ற தலையீடாக கருதுகிறது"

2.யதார்த்தத்திற்கு முரணான கூற்று:
  "போர் நிறுத்தம் என்பது கள நிலவரப்படி இரு நாடுகளின் ராணுவக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் (DGMO)(Director General of Military Operations.)
பேச்சுவார்த்தையால் ஏற்பட்டதே தவிர, ட்ரம்ப்பின் அழுத்தத்தால் அல்ல."

C.​ஆப்கானிஸ்தான் விவகாரம்:
தாலிபான் அமைப்பிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் 'நேரடிப் போர்' சூழலில்,
அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் நிற்பது,
பாகிஸ்தான் மேல் அமெரிக்கா வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

2.  இந்தியாவின் எதிர்வினை: கவலையும் கண்டிப்பும்:
அமெரிக்காவின் திடீர் மாற்றத்தை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

A.பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் எச்சரிக்கை!
"பாகிஸ்தானுக்கு வழங்கக்கூடிய எந்த ஒரு ராணுவ உதவியும் அது இந்தியாவிற்கு எதிரானது"என்ற வாதத்தை இந்தியா நீண்ட காலமாக முன்வைத்து வருகிறது.அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானுடன் நெருங்குவது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"பயங்கரவாதத்தை ஒழிக்காமல்
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை"
என்ற கொள்கையில் இந்தியா பிடிப்போடு உள்ளது.

B.ராஜதந்திர அழுத்தம்:
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு உச்சத்தை தொட்ட இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நகர்வு இந்தியாவிற்கு பேரிடியை இறக்கியது.அமெரிக்காவுடன் இந்தியா தற்போது சிவில் அணுசக்தி, விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் (iCET) ஆழமாக உள்ளது.பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு இந்த வளர்ந்து வரும் உறவைப் பாதிக்கக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.இந்தோ-பசிபிக்' கொள்கையில் இந்தியா ஒரு ஊன்றுகோலாக இருக்கும் பொழுது
பாகிஸ்தானுக்கு சலுகை வழங்குவது இந்தியாவுக்கு முரணானது என்று இந்தியா கருதுகிறது.

   B1)  இந்தோ-பசிபிக் கொள்கை;
இந்தக் கொள்கையின் நோக்கம் "சுதந்திரமான மற்றும் திறந்தநிலை இந்தோ-பசிபிக்" (Free and Open Indo-Pacific - FOIP) பகுதியை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.சுருக்கமாகச் சொன்னால்
இந்தப் பிராந்தியத்தில் உள்ள கடல் வழிப் பாதைகள் எந்த ஒரு நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படாமல் அனைத்து நாடுகளின் வர்த்தகத்திற்கு பொதுவாக இருக்க வேண்டும் என்பதாகும்.
(Image Source: Wikimedia Commons) 
[[File:Indo-Pacific region map.png|Indo-Pacific_region_map]] 
மேலும் தென் சீன கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனாவின் 'ஒரே மண்டலம் ஒரே பாதை' (BRI) என்ற திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இக்கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுகின்றன.மேலும் இந்த நான்கு நாடுகளின் தொகுப்பே குவாட் கூட்டமைப்பு ஆகும்.இந்தக் கொள்கையில் இந்தியாவின் பங்கு அதிகம் ஏனெனில்இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் 50% க்கும் மேல் இந்தப் பகுதி வழியாகவே நடக்கிறது.

3.இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்:
A.ஆயுதப் போட்டி: 
 பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நவீன போர் ஏவுகணைகள் மற்றும் விமான உதிரிபாகங்கள் வழங்குவதால்  அது பிராந்தியத்தில் நிலவும் ராணுவச் சமநிலையைப் பாதிக்கும் .

B.சீனாவின் தாக்கம்:
பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவின் பிடியில் உள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுடனும் நெருங்குவது இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம்.

C.சர்வதேச அழுத்தம்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் விவகாரத்தைக் கோர்த்து அழுத்தம் கொடுக்க முனைவது இந்தியாவின்
 இறையாண்மைக்குச் சவாலாக அமையலாம்.

முடிவுரை;
அமெரிக்க வெளியுறவு கொள்கையை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில்
'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' (America First) என்ற சுயநலக் கொள்கையையே அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும்.ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிற்குப் பாகிஸ்தானின் ஆதாயம் தேவைப்படுகிறது.மேலும் இந்தியாவின் "ராணுவ பலமும்" "சந்தை மதிப்பும்" அமெரிக்காவிற்கு தேவை!​இந்தச் சூழலில், இந்தியா தனது 'அணிசேராக் கொள்கை' மற்றும் 'தேசியப் பாதுகாப்பு' ஆகியவற்றிற்கு இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.தேசமயம் இதை அமெரிக்காவில் ஒரு ராஜதந்திர நகர்வாக கருதி தனது ராணுவ பலத்தைப் பெருக்குவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
வாசகர் களம்:
இந்தியாவுக்கு இது ஒரு சவாலாக அமையுமா? அல்லது இந்தியா தனது ராஜதந்திர உறவுகள் மூலம் இதைச் சமாளிக்கும் என்று நினைக்கிறீர்களா?

கருத்துகள்