உலகப்போர் - 3 இன் தொடக்கப்புள்ளியா ஈரான்? - ஒரு விரிவான அலசல்
ஈரான் தன் வரலாற்றிலேயே சோகப் பக்கங்களை தற்போது திருப்பிக் கொண்டுள்ளது!2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், ஈரான் உள்நாட்டுக் கலவரங்கள், கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் சர்வதேச நாடுகளின் நேரடி ராணுவத் தாக்குதல் என முப்பரிமாண நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
1.சர்வதேச தாக்குதல்,உச்சகட்ட போர் பதற்றம்:
பிப்ரவரி 28, 2026 அன்று வெளியான தகவல்களின்படி அணுசக்தி திட்டத்தின் மூலமாக கருதப்படும் யுரேனியம் செறிவூட்டலை முடக்கும் நோக்கில்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பாரிய வான்வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
A தாக்குதலின் நோக்கம்:
ஈரானின் அணுசக்தி மையமாக விளங்கும் ஃபோர்டோ (Fordow),நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி சிதைப்பதே இந்த தாக்குதலின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
B ஈரான் தரப்பில் எதிர் தாக்குதல்:
இதற்கு பதிலடியாக ஈரான் தன் நாட்டின் புரட்சிகர பாதுகாப்பு படை( IRGC-Islamic Revolutionary Guard Corps)மூலம் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் 'ஏவுகணை தாக்குதல் 'நடத்தியது.
இதன்மூலம் குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தளங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.
C படிக்கும் வயதில் முடிந்த வாழ்க்கை:
ஈரானின் தெற்கு பகுதியில் ஒரு பெண்கள் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 40 குழந்தைகள்
உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது உலக நாடுகளுக்கிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
2.உள்நாட்டு எழுச்சியும் அடக்குமுறையும்:
A.காரணம்:
கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் பன்மடங்கு விலை ஏற்றம்.
B. பரவல்:
ஈரானின் 31 மாகாணங்களிலும் மக்கள் வீதியில் வந்து போராடி வருகின்றன.
C.அரசின் எதிர்வினை:
போராட்டக்காரர்களை ஈரான் அரசு முடக்க நினைப்பதும் மேலும் தகவல் பரிமாற்றத்திற்கான இணைய சேவையை துண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
D.பாதிப்பு:
ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
More information ; நெருப்பு வளையத்தில் மத்திய கிழக்கு : அமெரிக்கா - ஈரான் மோதல் 2026
3. ஈரானில் பிறந்தது குற்றமா?வாழ வழியின்றி தத்தளிக்கும் மக்கள்.
ஈரானின் இந்த இக்கட்டான நிலைக்கு சிதைந்து வரும் பொருளாதாரமே மூல காரணம் ஆகும்.
A பணவீக்கத்தின் உச்சம்:
2026 பிப்ரவரி மாத நிலவரப்படி, ஈரானின் வருடாந்திர பணவீக்கம் 62.2% ஆக உயர்ந்துள்ளது.இது சாமானியர்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் பாதிக்கிறது.
B அன்றாட தேவைகள்:
அன்றாட தேவைகளான உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விலையேற்றம் இரட்டிப்பானது மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தூண்டியது.
C மின்வெட்டு தட்டுப்பாடு;
எரிசக்தி வளம் மிக்க நாடாக இருந்தும், பராமரிப்பு இல்லாமை மற்றும் தடைகள் காரணமாகப் பெரும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் பல தொழிற்சாலைகள் மூடிய நிலையில் "வேலையில்லா திண்டாட்டம்" தலைவிரித்து ஆடுகிறது
4. சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர கருத்துக்கள்.
ஈரானைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளும் மற்றும் உலக வல்லரசுகளும் ஈரான் விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
A.அமெரிக்காவின் நிலைப்பாடு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஏவுகணை திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.இதற்காக 'அதிகபட்ச அழுத்தம்' என்ற கொள்கையை அமெரிக்க கையில் எடுத்துள்ளது.
B. சவுதி அரேபியா:
'வளைகுடா நாடுகளில் அத்துமீறி ஈரான் தாக்குவது பிராந்தியத்தின் இறையாண்மைக்கு எதிரானது'என சவுதி அரேபியா கடுமையாக சாடியுள்ளது.
C.தரகர் பேச்சுவார்த்தைகள்:
ஒரு பக்கம் போர் நடந்தாலும் மற்றொரு பக்கம் ஓமன் போன்ற நாடுகள் நகரில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி மையங்களை முழுமையாக அழிக்க முன்வராதது போரின் தீவிரத்தை மேலும் தீவிரப் படுத்தி உள்ளது.
5. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை:
A.தாக்குதலின் அளவு:
பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேலிய விமானப்படை வரலாறு காணாத தாக்குதலை ஈரான் மேல் நடத்தியது.
இதில் சுமார் ஒரே நேரத்தில் 200 போர் விமானங்கள் 500 வான் பாதுகாப்பு அமைப்புகளின் இலக்குகளைத் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
B.பாதிப்புகள்:
இந்தத் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம், உளவுத்துறை அமைச்சகம் மற்றும் அணுசக்தி தலைமையகம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
C.உயிரிழப்புகள்:
இந்த தாக்குதலுக்கு சுமார் 1,000 முதல் 1,200 வரை பலியாகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.உலக நாடுகளுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
6.உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கை:
A.ஐக்கிய நாடுகள் சபை :
இரு நாடுகளுக்கு இடையேயான இந்த ராணுவ மோதல் சர்வதேச அமைதியை
சீர்குலைப்பதாகவும் மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.
B.அமெரிக்கா:
ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்கும் நோக்கத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்கா தரப்பில் வைக்கப்பட்ட வாதம்.
C.ரஷ்யா மற்றும் சீனா:
இந்த தாக்குதல் தேவையற்ற ஆக்கிரமிப்பின் அடையாளம்,இது பிராந்தியத்தில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும் விமர்சனங்களை அடுக்கி உள்ளது
7.வருங்காலம்:ஈரான் கடைசி திக் திக் நிமிடங்கள்:
ஈரானின் தற்போதைய சூழல் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசுக்கு ஆதரவான ராணுவப் படைகள் எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும் தொடர் மக்கள் போராட்டத்தால் அந்த நாட்டின் அடித்தளமே வலுவிழந்துதான் இருக்கிறது.ஈரானில் நிலவும் இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கு நாடுகளின் நிலைத்தன்மையை மட்டுமல்லாமல், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதாரத்தையும் பாதிக்கும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இது இரு நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்சனை அல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் இது ஒரு எச்சரிக்கை.
முடிவுரை:
" அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது"என்ற பழமொழி ஈரானுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.அதன் விளைவாக இன்று 40 பள்ளி குழந்தைகளின் எதிர்காலங்கள் போருக்கு இறையாகின.ஒரு பக்கம் ஈரான் தரப்பில் வைக்கக்கூடிய அழுத்தமான நியாயங்கள்!மற்றொரு பக்கம் அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தம்.இவை இரண்டும் தோற்ற நிலையில் ஈரான் மீது தாக்குதல் அரங்கேறி உள்ளது.இதை இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினையாக பார்ப்பதை விட சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கங்களை புரிந்து கொண்டு உலக நாடுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தை கொண்டு வர வேண்டும்.
"போர் இழப்புகளைத் தான் தரும்
இழந்ததை தராது"
கருத்துகள்
கருத்துரையிடுக