ஈரான் - இஸ்ரேல் நேரடிப் போர்: ஒரு படுகொலையும், தணியாத நெருப்பும்.
மத்திய கிழக்கில் இதுவரை நிலவி வரும் சூழல் வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது.தற்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் படுகொலைச் செய்தி, அந்த அந்த நாட்டின் போர் சூழலை
மேலும் தீவிரப் படுத்தி உள்ளது.
ஈரான் தற்பொழுது முழுவதுமாக போரினை கையில் எடுத்துள்ளது
1.யார் இந்த காமேனி? ஈரானின் உச்சபட்ச பொறுப்பு மற்றும் அதிகாரம் அந்த நாட்டில் "உச்சபட்ச தலைவர்"பொறுப்புக்கே உள்ளது.
இந்தப் பதவியில் இது நாள் வரை
தலைமை ஏற்று நடத்தி வந்த உச்சபட்ச தலைவர் காமேனி ஆவார்.அந்த நாட்டின் அதிபரை தேர்ந்தெடுக்கக் கூடிய அதிகாரம் மக்களுக்கு இருந்தாலும்,
அவரை நிர்ணயிக்கக்கூடிய அதிகாரம் காமேனியிடம் உள்ளது.மேலும் ஈரானின் ராணுவம்,வெளியுறவு கொள்கை,
நீதித்துறை போன்ற துறைகள் காமேனியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
A.அரசியல் பின்னணி;
1979-இல் ஈரானிய புரட்சியைத் தலைமை தாங்கி நடத்திய ரூஹொல்லா கொமெய்னி மறைவிற்குப் பிறகு ஈரானின் இரண்டாவது 'உச்ச தலைவராக'
காமேனி பதவியேற்றார்.மேலும் இதற்கு முன் 1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
B.இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான கொள்கையை கொண்டவர்.ஈரானின் பலமான அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகளில் இவரது முடிவுகளே இறுதியானது.மேலும் அந்நாட்டின் "ஷியா" என்ற இஸ்லாமிய பிரிவின் மதகுருவாகும் மதிக்கப்படுகிறார்.
2. காமேனி படுகொலையும்:ஈரான் நகர்வும்.
சமீபத்திய செய்திகளின்படி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக ஈரான் மேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சத் தலைவர் அலி காமேனி படுகொலை செய்யப்பட்டது உலகம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது மத்திய கிழக்கில் நிலவிக் கொண்டிருந்த போரை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அமைந்தது.
"ஈரானின் அடையாளம் சிதைக்கப்பட்டது"இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீதான கோபத்தை மேலும் தீவிர படுத்தியுள்ளது.
2 ." பழிக்குப் பழி"பதில் தாக்குதலை கையில் எடுத்த ஈரான்:
ஈரான் தனது எல்லைகளில் இருந்து
இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள்
மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
1.இஸ்ரேல் மீது தாக்குதல்;
இஸ்ரேலின் முக்கிய நகரமும் கிறிஸ்தவர்களின் புனித தலம் அமைந்துள்ள இடமான "ஜெருசலேம்"
ஈரானின் ஏவுகணை தாக்குதலை தற்பொழுது சந்தித்து வருகிறது.மேலும்
"டெல் அவிவ்"போன்ற நகரங்கள் ஈரானின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) பகுதியில் ஏவுகணை விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.வான்வழி தாக்குதலில் சிக்கிய வளைகுடா நாடுகள்:
அமெரிக்காவின் ஆதரவு மற்றும் நட்பு நாடுகளாக கருதப்படும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் இலக்கு வைத்துள்ளது.
A.துபாய், தோஹா, மனாமா:
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் இன்று ஈரான் தாக்குதல் நடத்தியதில் அங்கு ஒரு அச்சம் கலந்த பதற்றம் நிலவி வருகிறது.
B.விமான சேவை முடக்கம்:
எப்போதும் பரபரப்பாக இருக்கும் துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்கு "விமானப்
போக்குவரத்து"முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து (கொல்கத்தா உட்பட) செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3.கடல்வழிப் போர் (Strait of Hormuz):
ஈரானின் தற்போதைய நகர்வு உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
A.கப்பல் மீது தாக்குதல்:
ஹார்முஸ் ஜலசந்தி அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற 'ஸ்கைலைட்' (Skylight) என்ற எண்ணெய் ஏற்றிக் சென்ற கப்பல் மீது
ஈரான் தாக்குதல் நடத்தியதில் கப்பல் முழுவதுமாக சேதம் அடைந்து கடலுக்குள் மூழ்கிக் கொண்டுள்ளது.
இது உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் கண்டுள்ளது.இதன் மூலம் கச்சா எண்ணையின் விலை உச்சத்திற்கு செல்லும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை .
4. பினாமிப்படைகளின் (Proxies) நகர்வு:
ஈரான் நேரடி தாக்குதல் ஒரு பக்கம் செய்தாலும் மற்றொரு பக்கம் பினாமிப்படைகளுக்கு பொருள் உதவி செய்து மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வருகிறது.
ஹிஸ்புல்லா:
ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானிலிருந்து இஸ்ரேலின் வடக்கு எல்லை மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி வருகிறது.இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெய்ரூட் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
5.ஈராக் தாக்குதல்:
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பினாமிப்படை ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
6.ஈரான் நாட்டின் தற்போதைய நிலை;
A. தற்காலிக குழு நியமிப்பு:
காமேனியின் மறைவைத் தொடர்ந்து,
அந்நாட்டின் தற்போதைய அதிபரான
"மசூத் பெசெஷ்கியன்" தலைமையில் மூன்று பேர் கொண்ட தற்காலிகக் குழு நாட்டை வழிநடத்தி வருகிறது.
B. 40 நாட்கள் தேசிய துக்கம்:
காமேனியின் இறப்பிலிருந்து மீளாத
ஈரான் அரசு 40 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.அதே சமயம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஈரானிய மக்கள் கிளர்ச்சி செய்து ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரை
கையில் எடுத்துள்ளது.இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொடும் என்பதில் ஐயமில்லை.இது
இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
முடிவுரை:
ஈரானின் இந்த போர்ச்சூழல் மேலும் நீடிக்கும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த ஆசிய மற்றும் மேற்கத்திய நாடுகளின்
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.
மனிதாபிமான அடிப்படையில் வல்லரசு நாடுகள் இதில் தலையிட்டு
அமைதியை நிலைநாட்டாவிடில் போரினால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.
போர் இழப்புகள் தான் தரும்! இழந்ததை அல்ல!
கருத்துகள்
கருத்துரையிடுக