ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் 2026: ஈரானின் பதில் தாக்குதலும் பிராந்திய விளைவுகளும்

2026 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம்.பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான நிழல் யுத்தம், தற்போது நேரடிப் போராக முற்றியுள்ளது.பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து  "Operation Epic Fury" என்ற அதிரடித் தாக்குதல் ஈரான் மேல் நடத்தியது.இந்த தாக்குதலின் விளைவாக ஈரானின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பை 
நிலைகுலையச் செய்தது.இதற்கு பதிலடி தாக்குதலாக ஈரான் கையில் எடுத்தது "Operation True Promise IV" (உண்மை வாக்குறுதி IV).இந்த தாக்குதலின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகள் ஒரு போர்க்களமாக காட்சியளிக்கிறது.
1. தாக்குதலின் பின்னணி
இந்த மோதலுக்கான முக்கியமான காரணமாக அமைந்தது  ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுதான்.2026 பிப்ரவரி தொடக்கத்தில் ஜெனீவாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்."ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை 
முற்றிலுமாக நிறுத்த வேண்டும்" என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்க மறுத்தது.அதனைத் தொடர்ந்து
ஈரானின் உள்நாட்டிலேயே ஈரான் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை நீக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்ட்
எச்சரித்தார்.எதற்கும் செவி சாய்க்காத ஈரான் மேல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர்  இணைந்து வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டனர்.இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டார்.மேலும் இந்த தாக்குதலில் முக்கிய ராணுவ மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
(BBC TAMIL)
1A. முக்கிய ராணுவ மற்றும் அரசு அதிகாரிகள்.
    ஈரான் ராணுவ கட்டமைப்பை வலுவிழக்க செய்யும் வகையில் ஒரே தாக்குதலில் பல முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டன.
 # அப்துல்ரஹீம் மௌசாவி (Abdolrahim Mousavi): ஈரானிய ராணுவத்தின் தலைமைத் தளபதி (Chief of Staff).
அஜிஸ் நசீர்சாதே (Aziz Nasirzadeh):
ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர்.
# முகமது பாக்பூர் (Mohammad Pakpour):
புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தரைப்படைத் தளபதி.
அலி ஷாம்கானி (Ali Shamkhani):
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மற்றும் உச்ச தலைவரின் ஆலோசகர்.
மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.ஈரானின் "பழிக்கு பழி".
 ​தனது தலைமைத்துவத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் புரட்சிகர ராணுவ படை (IRGC) மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
A.இஸ்ரேல் மீதான தாக்குதல்:
ஈரான் தனது 'ஷஹாப்' (Shahab) மற்றும் 'ஃபத்தாஹ்' (Fattah) ரக அதிநவீன ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல்ஈரான் தனது 'ஷஹாப்' (Shahab) மற்றும் 'ஃபத்தாஹ்' (Fattah) ரக அதிநவீன ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைக் குறிவைத்து ஏவியது.
இதில் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி சீறிப் பாய்ந்தது.
இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' (Iron Dome) மற்றும் 'ஆரோ' (Arrow) பாதுகாப்பு அமைப்புகள் பலவற்றைத் தடுத்தாலும், சில ஏவுகணைகள் ராணுவத் தளங்களுக்கு அருகில் விழுந்து சேதத்தை உண்டாக்கின.
B.அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல்:
 ஈரான் தனது தாக்குதலை இஸ்ரேலுடன் முடித்துக் கொள்ளவில்லை.மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தலங்கள் அதன் முக்கிய இலக்காக மாறின.
      #   கத்தார்: கத்தாரில் உள்ள அல்-உடைத் (Al-Udeid) என்னும் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது  ஈரானின்
பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடித் தாக்குதலை நடத்தின.
       #  சவூதி அரேபியா:ஈரானின் ட்ரோன்கள் மூலம் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தூதரக குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டன.இதில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
       # துபாய்:துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஈரானை தாக்குவதற்காக அமெரிக்காவுக்குத் தனது வான்பரப்பையோ அல்லது நிலத்தையோ பயன்படுத்த அனுமதி அளித்த நாடுகள் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.குவைத், பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக ஓமனின் 'சலாலா' (Salalah) மற்றும் 'துகம்' (Duqm) துறைமுகங்களில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் சேதமடைந்தன.
3.​ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: உலகப் பொருளாதார நெருக்கடி:
ஈரானின் மிக வலிமையான ஆயுதம் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) ஆகும்.உலகின் 30% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாகவே நடைபெறுகிறது. தற்பொழுது எதிர் தாக்குதலின் ஒரு கட்டமாக ஈரான் இந்த ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது.
A.கப்பல்கள் சிறைபிடிப்பு:
இந்த ஜலசந்தி யின் வழியாகச் சென்ற பல வணிக கப்பல்களை ஈரானிய கடற்படை சிறைபிடித்தது. இதில் இந்திய ஊழியர்கள் சிலரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிகிறது. 
B.எண்ணெய் விலை உயர்வு:
இந்த தடையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 150 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
4.உயிரிழப்புகளும் சேதங்களும்
தற்போதைய நிலவரப்படி, இந்த நான்கு நாள் போரில் ஈரானில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அடங்குவர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தரப்பில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லாவும் இந்த மோதலில் குதித்துள்ளதால், லெபனான் எல்லையிலும் போர் தீவிரமடைந்துள்ளது.
முடிவுரை:
ஈரானின் பதில் தாக்குதல் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது தங்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டமாக அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நாடுகள் உடனடியாகத் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்றால், 2026-ஆம் ஆண்டு ஒரு பெரும் அழிவின் ஆண்டாக வரலாற்றில் பதியப்படும்.போர் இழப்புகள் தான் தரும் இழந்ததை தராது.

கருத்துகள்