2026-ஆம் ஆண்டின் சர்வதேச புவிசார் அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்புமுனையாக தற்பொழுது சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற மூன்று இஸ்லாமிய நாடுகளின் நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 7, 2026 அன்று சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் ஆகிய மூவரும் இணைந்து 'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' (Mecca Joint Defence Agreement) கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் 'மெக்கா ஒப்பந்தம்'
என விமர்சிக்கின்றனர்.
A. ஒப்பந்தத்தின் முதன்மை அம்சங்கள்:
(Attack on one, attack on all)
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான சரத்து,
"கூட்டமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீது வெளிப்புற இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்"
என்ற நேட்டோவின் கோட்பாட்டை கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்கள் "இஸ்லாமிய நேட்டோ" (Islamic NATO) என்று வர்ணிக்கத் தொடங்கியுள்ளன.
B மூன்று முனைகளின் அசுர கூட்டணி (The Strategic Triangle);
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் இது ஒரு சாதாரண உடன்படிக்கையாக தெரியவில்லை. மூன்று வெவ்வேறு வளர்ச்சிகள் கொண்ட நாடுகளின் ஒரு கூட்டமைப்பாக இது பார்க்கப்படுகிறது.
1. சவுதி அரேபியா (பொருளாதார பலம்):
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று.
இதையடுத்து OPEC (ஓபெக் - Organization of the Petroleum Exporting Countries) எனப்படும்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் சவுதியின் முடிவுகளே உலக சந்தையில் எரிபொருள் விலையைத் தீர்மானிக்கின்றன.
மேலும் வரம்பற்ற நிதி ஆதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
2. துருக்கி: நவீன ராணுவ தொழில்நுட்பம் & நேட்டோ அனுபவம்
துருக்கி இந்த கூட்டணியின் "தொழில்நுட்ப மற்றும் மூலோபாய மூளையாக" (Strategic Brain) செயல்படுகிறது.
துருக்கிக்கு 'நேட்டோ' (NATO) அமைப்பில் 74 ஆண்டுகாலப் நீண்ட அனுபவம் உள்ளது.
மேலும் NATO உடன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நேட்டோவிலேயே 2-வது மிகப்பெரிய தரைப்படையைக் கொண்ட நாடாக துருக்கி உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் நாவாய்கள் (Warships), வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence) மற்றும் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை (KAAN) சொந்தமாக தயாரிக்கும் தொழில்நுட்பச் செறிவை துருக்கி அடைந்துள்ளது.
3.பாகிஸ்தான் (ஆட்பலம் & அணுஆயுத வல்லமை):
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில்
பாகிஸ்தானிடம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதம் உள்ளது.
மேலும் பாகிஸ்தான் ராணுவம் பனி படர்ந்த இமயமலைச் சிகரங்கள், சியாச்சின் போன்ற உலகின் மிக உயரமான போர் முனைகள் (High-Altitude Warfare) மற்றும் பாலைவன எல்லைகள் போன்ற கடுமையான சூழலிலும் தொடர்ந்து போரிடும் காலாட்படையை கொண்டது.
முக்கிய அம்சம்: நிதி, தொழில்நுட்பம், அணுஆயுதப் பாதுகாப்பு ஆகிய மூன்று தூண்களும் ஒரே புள்ளியில் இணைவது, மத்திய கிழக்கின் பாதுகாப்பு சமன்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளது.
C. 🇺🇸 அமெரிக்காவுக்கு வைக்கப்பட்ட 'செக்' ஏன்?
பல தசாப்தங்களாக வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவே தலைமை பொறுப்பேற்று பாதுகாத்து வந்தது.
ஆனால் தற்பொழுது அமெரிக்காவின் போக்கு மாறும் பட்சத்தில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு அங்கமாக இந்த கூட்டு உடன்படிக்கை பேசப்பட்டு வருகிறது.
1. இரண்டு வல்லரசுகளின் மோதல் போக்கு:
வேகமாக வளர்ந்து வரும் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா தனது முழு கவனத்தையும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் செலுத்தி வருகிறது.
இதன் விளைவாக மத்திய கிழக்கில்
பாதுகாப்புச் சமநிலை கேள்விக்கு உள்ளாகிறது.
2. நிபந்தனைகளுடன் கூடிய ஆயுத விற்பனை:
சவுதி அரேபியா அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்க முற்படும் போது, அமெரிக்க நாடாளுமன்றம் (US Congress) கடுமையான அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த நிபந்தனைகளை விதித்தது.
ஆனால், துருக்கியும் பாகிஸ்தானும் அத்தகைய கடுமையான மேற்கத்திய நிபந்தனைகள் ஏதுமின்றி, பரஸ்பர பாதுகாப்பு மற்றும் பிராந்திய தேவைகளின் அடிப்படையில் சவுதிக்கு ராணுவ உதவிகளையும் ஆயுதங்களையும் வழங்க முன்வந்துள்ளன.
3. பாதுகாப்புச் சவால்கள்;
செங்கடல் மற்றும் எண்ணெய் வழித்தடங்கள் மீதான ஈரான் தாக்குதலில் அமெரிக்கா உடனடியாகத் தலையிடாததால் அமெரிக்க மீதான நம்பிக்கை தளர தொடங்கியுள்ளது.
"நமக்கான பாதுகாப்பை நாமலே உருவாக்க வேண்டும்" என்ற காரணத்திற்காக இந்த கூட்டு உடன்படிக்கையில் சவுதி இணைந்துள்ளது.
D. 🌐 உலக அரசியலில் இதன் தாக்கம் என்ன?
1. டாலர் ஆதிக்கத்திற்கு ஆபத்து:
வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பிடியிலிருந்து விலகி துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சீனா பக்கம் சாய்ந்தால், உலக எண்ணெய் வர்த்தகத்தில் 'பெட்ரோ-டாலரின்' (Petrodollar) ஆதிக்கம் குறையக்கூடும்.
2. இந்தியாவின் பார்வை:
தற்பொழுது சவுதியுடன் இந்தியா மிக நெருங்கிய நல்லுறவில் உள்ளது.
ஆனால் தற்பொழுது இந்த கூட்டு உடன்படிக்கையின் மூலம் சவுதியுடன் இணையும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகள் இந்தியாவிற்கு எதிரான போக்கை கொண்டது.
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் சவுதி ராணுவ ரீதியாக இணைவது புதுடெல்லியின் வெளியுறவுக் கொள்கைக்குச் ஒரு புதிய ராஜதந்திர
சவாலாக அமையும்.
முடிவுரை
மெக்கா ஒப்பந்தம் 2026 என்பது வெறும் ஒரு ராணுவக் கூட்டிணைவு மட்டுமல்ல; அது "அமெரிக்காவிற்கு பிந்தைய உலக அரசியலின்" (Post-American World Order) தெளிவான வெளிப்பாடு. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு இனி மேற்கத்திய நாடுகளின் வாசலில் நிற்க வேண்டியதில்லை என்ற புதிய சகாப்தத்தை இந்த மெக்கா ஒப்பந்தம் தொடங்கி வைத்துள்ளது.
வாசகர்க்களம்;
இந்த 'மெக்கா ஒப்பந்தத்தை' நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"
A. அமெரிக்க ஆதிக்கத்திற்கு வைக்கப்பட்ட முடிவுரை
B. இஸ்லாமிய நாடுகளின் பலமான தற்காப்பு அரண்
C. பிராந்தியப் பாதுகாப்பில் உருவாகும் புதிய சவால்
(உங்கள் பதிலை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்!)