முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

உலக வரலாற்றில் நீங்காத ரத்தக் கறைகள்:முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.

வரலாற்றின் பக்கங்கள் வெற்றிகளால் மட்டுமல்ல, அநீதியால் சிந்தப்பட்ட ரத்தத்தாலும் எழுதப்பட்டவை. அப்படி ஒரு தீராத ரத்தக் கறையாக உலக வரலாற்றில் உறைந்து கிடக்கிறது முள்ளிவாய்க்கால். தன் இனத்திற்காகவும், மொழிக்காகவும் நின்ற மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த அந்தப் பேரிடர், " இந்த உலகில் மனிதநேயம் மாண்டுவிட்டதா? " என்ற கேள்வியை இன்றளவும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.      A .  இனப்படுகொலையின் ஆணிவேர்: இலங்கை குடியுரிமை சட்டம் ஓர் பார்வை!       பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தேயிலை மற்றும் காபி கொட்டைகள் முக்கிய பங்கு வகித்தன. மேலும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான " மலையகத்  தமிழர்கள்" அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சிந்திய ரத்தத்தில்தான் இலங்கையின்  பொருளாதாரம் தழைத்தது! ஆனால், 1948 -ல் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் கொண்டு வரப்பட்ட 'இலங்கை குடியுரிமைச் சட்டம்' ( Ceylon Citizenship Act ) ஒரு மாபெரும் துரோகத்தைச் செய்தது. 1. தமிழின உ...

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.யாருக்கு லாபம்?

இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் யாருக்கு? என்னென்ன?நன்மைகள் என இந்த கட்டுரையும் விரிவாக காணலாம்.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருளின் இறக்குமதி வரியை 50 விழுக்காடு உயர்த்தினார்.இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.

அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கான முக்கிய காரணங்கள்;
அமெரிக்கா இந்தியாவின் மீது அதிக வரி விதிப்பதற்கான முக்கிய காரணங்களாக நான் கருதுவது
ரஷ்யா உடனான நெருங்கிய உறவு;
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது .இது ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வதாக அமெரிக்கா கருதுகிறது.
இதன் மூலம் கடந்த 2025 முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தியது.இது இந்தியா அமெரிக்கா இடையேயான பரஸ்பர உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பரஸ்பர வரிவிதிப்பு;
சுருக்கமாகச் சொன்னால் நீ 50%விழுக்காடு  வரி ஏற்றினால் நானும் 50%விழுக்காடு வரி ஏற்றுவேன்.இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்து வைப்பது ​ஹார்லி டேவிட்சன் சர்ச்சை.
ஹார்லி டேவிட்சன் சர்ச்சை:
அமெரிக்காவின் பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மீது இந்தியா அதிகப்படியான இறக்குமதி வரி விதித்தது.மேலும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தது இந்தியா.இதனை டிரம்ப் அவர்கள் பலமுறை பொதுவெளியில் கூறியிருக்கிறார்.
வர்த்தகப் பற்றாக்குறை;
சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்க இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் அளவைவிட இந்தியா அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் அளவு அதிகம்.அதாவது அமெரிக்கா-இந்தியா உடனான வர்த்தக பற்றாக்குறை 45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.இதனை ட்ரம்ப் அவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டி உள்ளார்.
சந்தை அணுகல் சிக்கல்கள்;
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாக கூடிய மருத்துவ உபகரணங்கள் ,பால் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு இந்திய சந்தையில் நுழைய சில கட்டுப்பாடுகளும் சட்டம் ரீதியான சிக்கல்களும் உள்ளன இவற்றை தளர்த்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கோரிக்கை.
தற்போதைய கள நிலவரம்;
தற்போதைய செய்திகளின்படி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதால் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 50% வரிகள் இப்போது 18% ஆக குறைக்கப்பட்டது.
இந்தியா செய்த மாற்றம்:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் தொழில்துறை மற்றும் விவசாய பொருட்களின் மீதான இறக்குமதி வரி தற்சமயம் இந்தியா கணிசமாக குறைத்துள்ளது.இதன் மூலம் அமெரிக்காவின் வர்த்தக சந்தையில் ஒரு புது கதவு திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா அளித்த வாக்குறுதி:
அடுத்த ஐந்தாண்டுகளில் $500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா வாங்க ஒப்புக்கொண்டது.
இந்தியா வாங்க ஒப்புக்கொண்ட பொருட்கள்:
எரிசக்தி;கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு.
தொழில்நுட்பம்;கணினியில் பயன்படும் ஜி பி யு கள் மற்றும் அதிநவீன மென்பொருள்கள்.
விமானம்;போயிங் போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து
அதிகப்படியான உதிரி பாகங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
தாதுக்கள்;நிலக்கரி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள்.
பூஜ்ய வரி (Zero Duty) பிரிவுகள்;
சில குறிப்பிட்ட இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா முழுவதும் வரி விலக்கு அளித்துள்ளது.
ஜெனரிக் மருந்துகள்,
வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள்,விமான உதிரிபாகங்கள்,மசாலாப் பொருட்கள்,தேநீர் மற்றும் காபி.போன்ற இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதித்துள்ளது அமெரிக்கா.
இந்த ஒப்பந்தத்தில் யாருக்கு என்ன லாபம்?
இந்திய ஏற்றுமதியாளர்கள்; ஜவுளி, தோல் ,மற்றும் ரப்பர் பொருட்கள் ஏற்றுமதி 30 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நுகர்வோர்கள்;  அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள்,பாதாம், ஒயின்கள் ,மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கலாம்.
பங்குச் சந்தை; இந்த அறிவிப்பின் மூலம் சென்செக்ஸ் ஒரே நாளில் 4000 புள்ளிகள் வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
சவால்கள் மற்றும் தடைகள்:
வர்த்தக உறவு வலுவாக இருந்தாலும், சில சவால்களும் நீடிக்கவே செய்கின்றன. குறிப்பாக, விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதி வரி மற்றும் அறிவுசார் சொத்துரிமை (IPR) தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவின் 'America First' கொள்கையும் இந்தியாவின் 'Self-Reliant India' (ஆத்மநிர்பர் பாரத்) திட்டமும் சில நேரங்களில் முரண்படுகின்றன.
புதிய கூட்டணி (I2U2):
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா இணைந்த I2U2 கூட்டமைப்பு, மத்திய கிழக்கில் இந்தியாவின் பங்கை மாற்றியமைத்துள்ளது. நீர் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்த நாடுகள் இணைந்து செயல்படுகின்றன.
யாருக்கு லாபம்?
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் 'வெற்றி-வெற்றி' (Win-Win) சூழலையே உருவாக்குகிறது. இந்தியாவிற்கு நவீனத் தொழில்நுட்பமும், அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சந்தையும் கிடைக்கின்றன. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியாக இணைந்திருப்பது அவசியமாகிறது.
தேசிய நலனும் ராஜதந்திரமும்;
சர்வதேச அரசியல் என்பது எப்போதும் நிலையான நண்பர்களையோ அல்லது நிலையான எதிரிகளையோ கொண்டிருப்பதில்லை; அது நிலையான நலன்களை (National Interests) மட்டுமே கொண்டது. இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு ஒரு கடினமான, ஆனால் தவிர்க்க முடியாத சமரசமாகும்.
முடிவுரை:
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் என்பது வெறும் பொருளாதார ஒப்பந்தம் மட்டுமல்ல, இது ஆசிய பிராந்தியத்தில் ஒரு புதிய அதிகார சமநிலையை உருவாக்கும் முயற்சியாகும். வர்த்தகத் தடைகளைத் தாண்டி இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும்.
வாசகர் களம்;"தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் அமெரிக்காவை இந்தியா முழுமையாக நம்பலாமா? உங்கள் கருத்து என்ன?"

கருத்துகள்