மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அசைக்க முடியாத நாடு எது தெரியுமா?
ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்
நாளை காலை மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் என்று எல்லா செய்தி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வரும்.வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம்,
ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் சீனாவின் பெய்ஜிங் நகரம் போன்றவை அணு ஆயுத தாக்குதலில்
அனைத்தும் சாம்பல் ஆகின்றன.எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள்.மனித குலத்தின் கடைசி மூச்சாக இருக்கும் அந்த நள்ளிரவில் உலக வரைபடத்தில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பல வருடங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களோடு தப்பிக்கும்! எது என்று தானே யோசிக்கிறீர்கள்?
வாருங்கள் பார்க்கலாம்.
(இது ஒரு கற்பனை சித்தரிப்பு மட்டுமே)
1. சுவிட்சர்லாந்து (Switzerland)
ஆம், பணி மூடிய மலைகள்,ஆடம்பர வாழ்க்கை,
விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சுகள், மற்றும் காதலர்களின் ரொமான்ஸ் தேசம், போன்ற பெருமைக்கு உரித்தான சுவிட்சர்லாந்து_தான் அது. அமைதியை மட்டுமே போதிக்கக் கூடிய அந்த நாடு எப்படி மூன்றாம் உலகப் போரில் இருந்து தற்காத்துக் கொள்ளும்? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்!
2. அமைதியும் ஒரு புறம், ஆயுதமும் ஒரு புறம்,ஸ்விட்சர்லாந்தின் மறுபக்கம் :
இந்த அமைதியான அழகுக்கு பின் ஒரு ராணுவ கோட்டையின் ரகசியம் பதுக்கப்பட்டுள்ளது.மனித வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் கட்டிடாத ராணுவக் கோட்டையை பல நூற்றாண்டுகளாகவே ஸ்விட்சர்லாந்து கட்டி எழுப்பி வைத்துள்ளது.ஒரு பக்கம் அமைதியின் அம்சமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் மறுபக்கம் ஆயுதமேந்திய தேசமாக அறிவித்துக் கொண்டது.இந்த அழகிய பனி மலைகளுக்குள் என்னதான் இருக்கிறது. வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
3. "சுவிஸ் நேஷனல் ரிடவுட்" (Swiss National Redoubt.
சுவிட்சர்லாந்து தனது "ஆல்ப்ஸ்" மலைகளுக்குள் கட்டி எழுப்பியுள்ள அந்த பிரம்மாண்ட ராணுவ கோட்டையின் பெயர் "சுவிஸ் நேஷனல் ரிடவுட்" ஆகும். இது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்
"நாஜி ஜெர்மனியின்" ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டது.
4. மலைகளே ராணுவ பலம்.
ஸ்விட்சர்லாந்தின் புவிசார் அமைப்பை பார்க்கும் பொழுது தனக்கு கிடைத்த கரடு முரடான பனி மலைகளை பாரமாக கருதுவதை விட அதை தனது ஆயுத பலமாக கருதியது. ஆம் சுவிட்சர்லாந்து ராணுவம் ஆல்ப்ஸ் மலைகளின் உட்பகுதியைக் குடைந்து ஆயிரக்கணக்கான சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை உருவாக்கியது. வெளியிலிருந்து பார்க்க அழகிய பனிமலையாக தெரிந்தாலும் அதன் உள்ளே நவீன ராணுவத் தளவாடங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
5. ரகசிய மறைவிடங்கள்
A. மறைக்கப்பட்ட பீரங்கிகள்:
மலைச்சரிவுகளில் பாறைகளைப் போலவே வடிவமைக்கப்பட்ட கதவுகளுக்கு பின்னால் ராட்சச பீரங்கிகள் பதுக்கப்பட்டுள்ளது.
B.விமான ஓடுதளங்கள்:
சில மலைகளுக்குள் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய
ஹேங்கர்கள் (Hangars) அமைக்கப்பட்டுள்ளது.மேலும் விமானங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ரகசிய ஓடுதளங்கள் உள்ளது.
6. தற்காப்பு உத்தி (Defense Strategy)
எதிரிகள் நாட்டை தாக்கும் பொழுது இவர்கள் சமவெளி பகுதிகளை கைவிட்டு அனைத்து ராணுவ படையும் இந்த மலை கோட்டைக்குள் சென்று விடும்.அங்கிருந்து நீண்ட காலம் தங்கிப் போரிடும் வகையில் உணவு, நீர் மற்றும் மின்சார வசதிகள் இந்த 'ரிடவுட்' அமைப்பிற்குள் செய்யப்பட்டுள்ளன.
முடிவுரை:
ஒரு நாடு தனது புவியியல் அமைப்பை (Geography) எவ்வாறு மிகச்சிறந்த ராணுவ உத்தியாக மாற்ற முடியும் என்பதற்கு உலகிற்கே ஒரு
முன்னோடியாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது.வெறும் ஒரு நாட்டின் ராணுவ பலத்தை மட்டுமே வைத்து
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக