தீவிரமடையும் ரஷ்யா - உக்ரைன் போர்: நேட்டோவின் அடுத்த கட்ட அதிரடி என்ன?

      ரண்டு நாடுகளுக்கு இடையேயான எல்லைத் தகராறாகத் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் மோதல், இன்று உலக அதிகார மையங்களை அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் போராக உருவெடுத்துள்ளது. 2026-ன் இந்த பாதியில், வானத்தை ஆக்கிரமிக்கும் ட்ரோன் தாக்குதல்கள், முடங்கிப்போன தூதரகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் நேட்டோ அமைப்பின் அதிரடி பாதுகாப்பு வியூகங்கள் என உலக அரசியல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

A. கள நிலவரம்: ட்ரோன் போரும் உள்கட்டமைப்புத் தாக்குதல்களும்
       தற்போது போர்க் களத்தில் இரு தரப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன தொழில்நுட்பங்களையும் நீண்ட தூரத் தாக்குதல் அமைப்புகளையும் பயன்படுத்தி வருகின்றன
               Image sourced by TIME
1.​உக்ரைனின் ஆழமான வான்வழித் தாக்குதல்கள்:
         Image sourced by WSWS.ORG
(ஜூன் 3, 2026 புதன்கிழமையன்று, உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் துறைமுகத்திற்கு மேலே கரும்புகை மண்டலம் எழுவதைக் காணலாம். )
 
       ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதில் உக்ரைன் தனது சொந்த தயாரிப்பான
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் தளவாடப் பாதைகள் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    
2.    ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள்: 
      ரஷ்யா தனது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் தொழிற்சாலைகளையும் போருக்கான ஆயுத உற்பத்திக்கு மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தும் 'போர்ப் பொருளாதாரத்தை' (Wartime Economy) முழுவீச்சில் இயக்கி வருகிறது. 
இதன் மூலம் அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்து, உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

B. அங்காரா மாநாட்டில் நடந்தது என்ன? ரஷ்யாவின் எதிர்பார்ப்பை தகர்த்த నేட்டோ!
         Image sourced by  Atlantic Council

1.  தகர்ந்த புடினின் வியூகம்
        இந்தப் போர் பன்னெடுங்காலம் நீடிக்கும் பட்சத்தில், உக்ரைன் மீதான மேற்கத்திய நாடுகளின் ஆதரவு காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அதிபர் புடினின் எதிர்பார்ப்பை, அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாடு முற்றிலும் தகர்த்துள்ளது.

2. பிரமாண்ட நிதி உதவி:
            நேட்டோ நாடுகளிடையே  சில அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உக்ரைனுக்காக 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி டாலர்கள் நிதி உதவி வழங்க நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

3.  உக்ரைனின் புதிய அந்தஸ்து:
      உலக அரங்கில் உக்ரைனை இதுவரை 'உதவி பெறும் நாடாக' மட்டுமே பார்த்து வந்த சூழல் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அதற்கு மாறாக, பிராந்தியப் 'பாதுகாப்பிற்குப் பங்களிக்கும் நாடு' என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை நேட்டோவிடமிருந்து உக்ரைன் தற்போது பெற்றுள்ளது.

C.  நேட்டோவின் அதிரடி திருப்பங்கள் & பாதுகாப்பு மறுசீரமைப்பு.
         உக்ரைன் போரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நேட்டோ கூட்டணி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது: 

1.   பாதுகாப்பு பட்ஜெட் உயர்வு (5% GDP Target): 
     இதன் முதல் கட்ட நடவடிக்கையாக நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களது பாதுகாப்புச் செலவீனத்தை தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (5% GDP) குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

 2. கிழக்கு ஐரோப்பிய அரண்: 
            Image sourced by NATO
        ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன்
நேட்டோவில் இணைந்த பிறகு, ரஷ்யாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க நேட்டோ அமைப்பு தனது கிழக்கு எல்லையான போலந்து, பால்டிக் மற்றும் கருங்கடல் பகுதிகளில் தனது படைகளையும்  கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளது. மேலும் அதிவிரைவுப் படைகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்தி, 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3.   ஆயுதக் கூட்டுத் தயாரிப்பு உரிமம் (Co-production):
      பிற நாட்டைச் சாராமல்  தங்கள் நாட்டிற்கு தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (Interceptor Missiles) தயாரிக்கும் உரிமங்களை வழங்குவது குறித்து நேட்டோ தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

D. உக்ரைன் போரின் உலகளாவிய மாற்றம்:
   2022-இல் தொடங்கிய உக்ரைன் போர், உலகளவில் மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இது உண்டாக்கிய முக்கியமான தாக்கங்கள்:

1. புவிசார் அரசியல் மாற்றம்:
    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து பல தசாப்தங்களாக நடுநிலை வகித்த 
ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தமையால் ரஷ்யா-நேட்டோ எல்லை மேலும் விரிவடைந்துள்ளது.

2. பொருளாதார நெருக்கடி:
       மேலை நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக 
ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆகியவை ஏற்றுமதி தற்பொழுது முடங்கியுள்ளது.
இதன் விளைவாக, பெட்ரோல் முதல் சமையல் எண்ணெய் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து, உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது.

3.ஆயுதப் போட்டி: 
      உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் பாதுகாப்புப் பட்ஜெட்டை உயர்த்தத் தொடங்கியுள்ளன.

முக்கியப் பார்வை:
ரஷ்யா - உக்ரைன் போர் என்பது பிராந்திய எல்லையைத் தாண்டி, எதிர்கால பன்னாட்டு ராணுவ தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு வியூகங்கள் மற்றும் ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பையே மறுவரையறை செய்யும் ஒரு முக்கிய சக்தியாக மாறியுள்ளது.

 

கருத்துரையிடுக

புதியது பழையவை