ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் 2026:நிழல் யுத்தமும் போரின் பின்னணியும்.

21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே-ஆன நிழல் யுத்தம் தற்போது போராக வலுப்பெற்றுள்ளது.இதன் விளைவால் பிராந்தியத்தில் நேரடியாக ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களாக வெடித்துள்ளது.
இது மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
1.    போருக்கான பின்னணி மற்றும் உடனடிக் காரணங்கள்.
இந்தப் போர் திடீரென உருவானது அல்ல.இதற்கான விதைகள் 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டிலேயே தூவப்பட்டன.              
A.  மோதலின் விதை விதைக்கப்பட்ட நாள்:அக்டோபர் 7 தாக்குதல்.
          சரியாக அக்டோபர்- 7-2023-ல் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதல் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அமைதியை மொத்தமாக சீர்குலைத்தது.
இந்த அமைப்புக்கு  நிதிஉதவி,
ஆயுதங்கள்,ராணுவபயிற்சி,ஆகியவை ஈரான் கொடுத்து உதவியது.இது இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளுக்கும் இடையிலான 'நிழல் யுத்தத்தை' (Shadow War) வெளிப்படையான மோதலாக மாற்றியது.
B.    ​ஈரானின் அணுசக்தி முன்னேற்றம்:
        2023-ன் இறுதியில் ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை 60% வரை உயர்த்தியது. இது இஸ்ரேலுக்கு "சிவப்பு எச்சரிக்கை" (Red Alert) விடுத்தது போன்றதாகும்.
C.   உச்சம் தொட்ட பதற்றம்:2025
12 நாள் தொடர் போர்:  
2025 ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு படைகளுக்கு இடையே
12 நாள் நடந்த நேரடி மோதல்கள் இன்றைய போருக்கான ஒரு அடித்தளமாக அமைந்தது.
D.    அரசியல் மாற்றங்கள்:
அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்,மற்றும்
 ஈரானின் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள்,ஆகியவை ஈரானின் தூதரக ரீதியிலான
பேச்சுவார்த்தைகளை முடங்கச் செய்தன.அமைதி பேச்சு வார்த்தைகள் தோல்வியை சந்தித்ததால் இராணுவ ரீதியிலான தீர்வு மட்டுமே ஒரே வழி என்ற நிலை உருவானது.
 E.    தற்போதைய தாக்குதலின் ஆரம்ப புள்ளி:
 பிப்ரவரி 28, 2026 அன்று அதிகாலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் ஈரானின் முக்கிய இராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது 900-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவின.இந்த தாக்குதல் ஒட்டுமொத்த ஈரானின் ராணுவ கட்டமைப்பை நடுநடுக்க செய்தது.

​2. அதிகார மாற்றமும் ஈரான் தலைமைச் சிக்கலும்
A. அயதுல்லா அலி காமேனியின் மறைவு: 
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார்.
இது ஈரானிய அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
B. புதிய தலைமை: 
மார்ச் 8 2026 அன்று ஈரானின் புதிய
உச்சபட்ச தலைவராக காமேனியின் மகன் மொஜ்தாபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றார்.ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அவருக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது.இருப்பினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தலைமை மாற்றத்தை அனுமதிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

3. இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பதில் தாக்குதல்கள்.
Image Source for Wikimedia Commons 
 யுத்தம் தற்பொழுது முப்படைகளிலும் தீவிரமடைந்துள்ளது
A.    ஏவுகணை மழை: 
 ஈரான் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவத் தளங்கள் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வருகிறது.
B.     இந்தியப் பெருங்கடல் பாதிப்பு:
போரின் தாக்கம் பாரசீக வளைகுடாவையும் தாண்டி இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. 
மார்ச் 4 அன்று, இலங்கைக் கடற்கரைக்கு அருகே ஈரானின் நவீன போர்க்கப்பலான 'IRIS Dena' அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டது. இது ஆசிய நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

​4.   உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்:
இந்தப் போர் சர்க்கார் முதல் சமையலறை வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
A. கச்சா எண்ணெய் விலை உயர்வு:
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $115 முதல் $120 வரை உயர்ந்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.
B.  இந்தியப் பொருளாதாரத்தின் நிலை:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை மத்திய கிழக்கிலிருந்தே இறக்குமதி செய்கிறது. எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு (வரலாற்று ரீதியான வீழ்ச்சி) இந்தியச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

5. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் 'ஆபரேஷன் சுரக்ஷா'
இந்த இக்கட்டான சூழலில் இந்தியா மிகவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது.
A.நடுநிலை அணுகுமுறை:
 போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் இந்தியா, அதே சமயம் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.
B. இந்தியர்களை மீட்பது: 
  வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய அரசு 'ஆபரேஷன் சுரக்ஷா' (Operation Suraksha) என்ற மாபெரும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

​6. சர்வதேச அரசியல் பிளவுகள்:
 ​இந்தப் போர் உலக நாடுகளை இரண்டு துருவங்களாகப் பிரித்துள்ளது:
A.​மேற்கத்திய கூட்டணி: 
அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றன.
B.ஈரான் ஆதரவு நாடுகள்: 
ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை ஒரு நாட்டின் இறையாண்மை மீதான மீறலாகக் கருதி கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு புதிய 'குளிர் யுத்தத்தை' (Cold War) நோக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

7.  மனிதாபிமானச் சிக்கல்கள்:
போரினால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். டெஹ்ரான் போன்ற நகரங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் போர் அவர்களை மேலும் வறுமைக்குள்ளாக்கியுள்ளது

முடிவுரை:
 ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான இந்தப் போர், வெறும் மூன்று நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; இது உலக ஒழுங்கையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வு. அணு ஆயுதப் போர் என்ற அச்சம் இன்னும் விலகவில்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து உடனடியாக ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டு வராவிட்டால், இது மூன்றாம் உலகப் போராக மாற வாய்ப்புள்ளது. அமைதியை நிலைநாட்டுவதே இப்போது உலகின் முதன்மைத் தேவையாக உள்ளது.
என் கருத்து:
"போர் இழப்புகள் தான் தரும் இழந்ததை தராது"
வாசகர் களம்:
​"ஈரான் - இஸ்ரேல் இடையே தற்போது நடந்து வரும் நேரடிப் போர், மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று நீங்கள்
கருதுகிறீர்களா? உங்கள் கருத்து என்ன?"

கருத்துகள்