உலகப் போரின் விளிம்பில் மத்திய கிழக்கு! அமெரிக்காவின் 'டெத்லைன்' முடிந்தது - ஈரான் மீது சரமாரி வான்வழித் தாக்குதல்!
Image Source: Wikimedia Commons
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் அசாதாரண சூழல் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா என பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தீவிர படுத்தும் விதமாக அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைகளும், ஈரான் மீதான வான்வழி தாக்குதல்களும் சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஏ. மோதலின் பின்னணி: டொனால்ட் டிரம்பின் 'ஆல்டிமேட்டம்';
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இதன் உச்சகட்டமாக ஈரானின் அணுசக்தி திட்டம் ஆக விளங்கும் யுரேனியம் செறிவூட்டலை " ஜீரோ" ஆகக் குறைக்க வேண்டும் என்றும், மேலும் ஹோர்முஸ் நீரிணையில் (ஹார்முஸ் ஜலசந்தி) சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்ட காலக்கெடுவை (டெட்லைன்) விதித்தார்.
அந்தக் காலக்கெடு தற்போது முடிவடைந்ததுதான் இந்தப் போர்ப் பதற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாகும்.
B. ஹோர்முஸ் நீரிணை முடக்கம்;
உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% முதல் 30% வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே
வணிகம் நடைபெறுகிறது.
(பட ஆதாரம்: விக்கிமீடியா காமன்ஸ்)
ஈரான் தனது எல்லையில் உள்ள இந்த முக்கிய கடல் வழியை மூடுவதாக அறிவித்தது, உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்த பிராந்தியத்திற்கு அனுப்பிய மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
சி. ஈரான் மீதான வான்வழி தாக்குதல்:
அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல்
இணைந்து ஈரான் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தன.இதில் ஈரானின் முக்கிய உளவுத் தலைமை இடங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தத் தாக்குதலில் ஈரான் உச்சபட்சத் தலைவர்,உயர் மட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஈரானில் ஹார்முஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் உள்ள ஷஜரே தய்பே (Shajareh Tayyebeh) பெண்கள் ஆரம்பப் பள்ளியின் மீது
அமெரிக்க படை பயன்படுத்திய டொமாஹாக் (டோமாஹாக்) ரக ஏவுணைகள் விழுந்ததில் சுமார் 175 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 100 -க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவிகள். 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிகளவில் பலியானார்கள்.
D. கச்சா எண்ணெய் விலையேற்றம்:
மத்திய கிழக்கு நிலவி வரும் இந்த மோதல் போக்கால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது வெறும் வாகன எரிபொருளோடு நிற்காமல், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.மேலும் இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய காரணிகளாக உள்ளது.
E. சர்வதேச எதிர்வினைகள்: ரஷ்யா மற்றும் சீனாவின் பங்கு:
இந்தப் போர் விவகாரத்தில் உலகம் இரண்டு துருவங்களாகப் பிரிந்துள்ளன.
மேற்கத்திய நாடுகள்:
பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அமெரிக்காவிற்கு ஆதரவாகவும், ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.
ரஷ்யா மற்றும் சீனா:
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகவும்,
மேலும் ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில்
குறிப்பாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது, மேலும் மூன்றாம் உலகப் போர் தூண்டும் விதமாக இது அமையும் என எச்சரிக்கை அறிவிப்பு
ரியாண்ட்ரா;
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; இது உலக வல்லரசுகளின் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாகும். ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில், உலகம் மற்றுமொரு அழிவுகரமான போரைச் சந்திக்க நேரிடும். அமைதி திரும்புமா அல்லது போர் வெடிக்குமா என்பது அடுத்த சில நாட்களின் நகர்வுகளைப் பொறுத்தே அமையும்.
வாசகர் களம்:
"உலகம் மீண்டும் இரு துருவங்களாகப் பிரிவது வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சாதகமா அல்லது பாதகமா? உங்கள் கருத்துக்களைக் கீழே பகிருங்கள்."
கருத்துகள்
கருத்துரையிடுக