அமெரிக்காவின் 'பின்வாசல்' மர்மம்: 2000 கைதிகள் விடுதலையும், கியூபாவின் ரகசிய நகர்வுகளும்!
(Image Source : Wikimedia Commons )
கரீபியன் கடலின் பொக்கிஷமாக கருதப்படும் கியூபா நவீன உலக வரலாற்றில் ஒரு தனித்துவமான நீங்கா இடம் பிடித்துள்ளது. இது ஒரு சிறிய தீவு நாடாக இருந்தாலும் பல தசாப்தங்களாக வல்லரசு நாடான அமெரிக்காவையே திணறடித்த அரசியல் வரலாற்றை கொண்டது.2026-ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில், கியூபா தனது உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச உறவுகளிலும் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.1.அழகிய தீவின் மறுபக்கம்: புரட்சியும் சோசலிசமும்.
(Image Source: Wikimedia Commons )
கியூபாவின் தற்போதைய அரசியலை தீர்மானித்தது 1959-இல் நடைபெற்ற கியூபப் புரட்சி ஆகும். பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் அவர்களது தோழர்கள் இணைந்து பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிந்தனர்.இதன் விளைவாக கியூபா கம்யூனிச நாடாக அறிமுகப்படுத்தப்பட்டது.
A.யார் இந்த படிஸ்டா?
(Image Source:Wikimedia Commons )
இவர் கியூபாவின் இராணுவ அதிகாரியாகவும், பின்னர் அந்நாட்டின் அதிபராகவும்(1940-1944 மற்றும் 1952-1959) பதவி ஏற்றவர்.இவரின் இரண்டாவது ஆட்சி காலம் சர்வாதிகார ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த அரசாகவும் விமர்சிக்கப்பட்டது.
பின்னாளில் இவருக்கு எதிராகவே பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகியோர் "கியூபப் புரட்சியைத்" தொடங்கினர். சரியாக 1959, ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவின் படைகள்
கியூபாவின் தலைநகரான "ஹவானாவைக்" கைப்பற்ற நெருங்கியபோது, படிஸ்டா தனது பதவியைத் துறந்துவிட்டு கியூபாவை விட்டு வெளியேறி டொமினிகன் குடியரசிற்குத் தப்பியோடினார்.
2.கம்யூனிஸ்ட் கோட்பாடும்: அமெரிக்காவின் அச்சமும்.
(Image Source: Wikimedia Commons )
அமெரிக்காவிற்கு வெறும் 90 மைல் தூரத்தில் கியூபா அமைந்துள்ளது.
தனக்கு அருகில் ஒரு கம்யூனிஸ்ட் நாடு உருவானது அமெரிக்காவிற்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவால் தொடர்ச்சியாக 1960-களிலிருந்து கியூபா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது கியூபாவின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்தது. இருப்பினும் அந்நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் உலகத் தரத்திற்கு வளர அந்தத் தடைகளே ஒரு தூண்டுதலாகவும் அமைந்தன.
3. காஸ்ட்ரோ முதல் டயஸ்-கனெல் வரை: கியூபாவின் அரசியல் கட்டமைப்பு.
கியூபா எதிர்க்கட்சியற்ற ஒற்றை கட்சி ஆட்சி முறையைக் (Single-party system) கொண்டது. இங்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி கியூப கம்யூனிஸ்ட் கட்சி (PCC) ஆகும்.மேலும் நீண்ட காலம் பிடல் காஸ்ட்ரோவும், அவருக்குப் பின் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவும், நாட்டையும் கட்சியையும் வழி நடத்தினர்.
இருப்பினும் சரியாக 2021-இல் ரவுல் காஸ்ட்ரோ பதவியிறங்கிய பிறகு, மிகுவேல் டயஸ்-கனெல் (Miguel Díaz-Canel) அதிபராகப் பொறுப்பேற்றார். காஸ்ட்ரோ குடும்பத்தைச் சாராத ஒருவர் உயரிய பதவிக்கு வந்தது கியூப அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது.
4. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழல் (2026)
தற்போது கியூபா பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத் தேவைகளுக்கு இடையே சமநிலை பேண வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
A.சிறைக்கைதிகள் விடுதலை - ஒரு ராஜதந்திர நகர்வு;
தற்போது வெளியான
செய்திகளின்படி கியூபா சுமார் "2000 அமெரிக்க கைதிகளை" விடுவித்துள்ளது. கியூபாவில் இந்த செயல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் கடந்து செல்ல முடியாது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறக்க எடுக்கப்பட்ட ஒரு ராஜதந்திர யுத்தியாக கருதப்படுகிறது.
B. பொருளாதாரச் சவால்கள்;
கியூபா தற்பொழுது கடுமையான பணவீக்கம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது.
மேலும் மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருந்த கியூபா
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மீண்டு வர போராடி வருகிறது. தற்போதைய கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கியூபாவின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
5. கியூபா - அமெரிக்கா உறவு: ஒரு பனிப்போர் தொடர்ச்சி;
(Image Source:Wikimedia Commons)
அமெரிக்க அதிபர் ஆன "டொனால்ட் டிரம்ப்" மீண்டும் பதவி ஏற்ற பிறகு கியூபா மீதான கொள்கைகளை மேலும் கடுமையாக்கினார்.கியூபாவை ஒரு "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு" (State Sponsor of Terrorism) என்ற பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது.
இதனால் சர்வதேச வர்த்தகத்தில் கியூபா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.இருப்பினும் கியூபாவின் இந்த புவிசார் அரசியல் கட்டமைப்பு காரணமாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கியூபாவில் தங்களது முதலீடுகளையும் ராணுவ ஒத்துழைப்பையும் அதிகரித்து வருகின்றன. இது அமெரிக்காவிற்குத் தனது "பின்புறத்திலேயே" ஒரு அச்சுறுத்தல் நிலவுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
6. வியக்க வைத்த கியூபாவின் சாதனைகள்;
இத்தனை தடைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கியூபா சில துறைகளில் உலகிற்கே முன்மாதிரியாக உள்ளது:
A. சுகாதாரம்:
கியூபாவின் மருத்துவர்கள் உலகெங்கிலும் பேரிடர் காலங்களில் பணியாற்றி வருகின்றன.மேலும் கியூபா தனது சொந்த தொழில்நுட்பத்தில் பல நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டறிந்து வருகிறது.
B. கல்வி:
100% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட மிகச்சில நாடுகளில் கியூபாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை:
கியூபா தற்போது ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கியூபாவின் ஒரே கொள்கை ஆன "சோசலிசக்" கொள்கைகளை முழுமையாகக் கைவிடாமல்,அதே சமயம் நவீன உலகப் பொருளாதாரத்தோடு இணைய வேண்டிய கட்டாயம் அதற்கு உள்ளது.கியூபாவின் இந்த நகர்வுகளை கூர்ந்து கவனிக்கும் போது கியூபா உலக நாடுகளுடன் இணக்கமாகச் செல்ல விரும்புகிறது என்பதை காட்டுகிறது.கரீபியன் கடலின் இந்தச் சிறிய தீவு, வல்லரசுகளின் அரசியலுக்கு மத்தியில் தனது தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை வரும் காலம் தீர்மானிக்கும்.
வாசகர் களம்
"சுமார் 67 ஆண்டுகளாகத் தொடரும் ஒற்றைக்கட்சி ஆட்சி, கியூபாவிற்குப் பலமா அல்லது பலவீனமா? உங்கள் கருத்து என்ன?"
கருத்துகள்
கருத்துரையிடுக