அடங்கமறுக்கும் அமெரிக்கா, இறங்க மறுக்கும் ஈரான்: உலகப் போர் 3-க்கான தொடக்கமா?

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவிய பனிப்போர் போன்ற சூழல், தற்பொழுது முழு போராக உருவெடுத்துள்ளது.
பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது நடத்திய மின்னல் வேகத் தாக்குதல் (Operation Epic Fury), பல தசாப்தங்களாக நிலவி வந்த பதற்றத்தை போராக மாற்றியது.இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளை மாற்றியமைக்கும் ஒரு மகா யுத்தமாக மாறியுள்ளது.
1. போருக்கான உடனடி காரணங்கள்:
       A.யுரேனியம் செறிவூட்டல் ஜீரோ%:
                  யுரேனியம் செறிவூட்டலை 0% சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்தது."மேலும் இது எங்களின் இறையாண்மை சார்ந்த விஷயம் நாங்கள் அமைதி வழியில் மின்சாரம் தயாரிக்கவே செறிவூட்டுகிறோம்," என்ற வாதத்தை
ஈரான் முன் வைத்தது.
1A.  யுரேனியம் செறிவூட்டலின் ஆபத்துகள்:
A.ஆயுதப் போட்டி;
             ஈரான் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் ஈரானின் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, துபாய், போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக அணு ஆயுதம் வாங்குதலில் மும்முரம் காட்டும். இது மத்திய கிழக்கு முழுவதையும் ஒரு 'வெடிமருந்து கிடங்காக' மாற்றும்.
1B. பொருளாதாரத் தடைகள்:
               செறிவூட்டலை நிறுத்தாததால் ஈரான் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகள், உலக நாடுகளுக்குச் செல்லும் எரிபொருள் விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தை முடக்கும் அபாயம் உள்ளது.
2.  உச்சத் தலைவர் மீதான உச்சக்கட்டத் தாக்குதல்;
               அமெரிக்காவின் நேரடி துல்லிய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலின் எதிர்வினையாக 
பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம், என்ற முழக்கத்தோடு, ஈரான் தனது "நிபந்தனையற்ற போரை" (Total War) பிரகடனப்படுத்தியுள்ளது.
3.பிராந்திய ஆதிக்கம்:
         மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கை முற்றிலுமாக சிதைப்பதும், அதன் ஏவுகணைத் தளங்களை அழிப்பதும் அமெரிக்காவின் முக்கிய இலக்காக அறிவிக்கப்பட்டது.

​B. போர்க்கள நிலவரம் (ஏப்ரல் 2026)
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் உக்கிரமாக நடந்து வருகிறது:
B1.ஈரானின் பதிலடி: 
        தனது தலைவர்களின் படுகொலைக்கு பதிலடியாக ஈரான் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவியது. குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில எரிசக்தி நிலையங்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.
 B2. கட்டமைப்பு அழிவு: 
        அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் ஈரானின் மிகப்பெரிய பாலமான 'B1 பாலம்' தகர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஈரானை "கற்காலத்திற்குத் தள்ளுவோம்" (Stone Ages) என்ற ரீதியில் அமெரிக்காவின் எச்சரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
B3.  ஹூதி கிளர்ச்சியாளர்களின் பங்கு:
         ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், டெல் அவிவ் (இஸ்ரேல்) மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி போரை விரிவுபடுத்தியுள்ளனர்.
​C.  ஹார்முஸ் நீரிணை மற்றும் உலகப் பொருளாதார பாதிப்பு:
இந்தப் போரின் மிக மோசமான விளைவு பொருளாதார ரீதியானது.
C1.  கடல் வழிப்பாதை முடக்கம்: 
           உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (LNG) கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்றுபோய் உள்ளது.
C2.  எண்ணெய் விலை உயர்வு: 
     கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளின் இறக்குமதிச் செலவை இருமடங்காக்கியுள்ளது.
C3.  பணவீக்கம்:
     எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச அளவில் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார மந்தநிலையை (Recession) எதிர்நோக்கியுள்ளன.
D. சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு:
​இந்த விவகாரத்தில் உலகம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது:
  D1 . மேற்கத்திய நாடுகள்: 
        பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக் கவலையை நியாயப்படுத்துகின்றன. இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுத்து வருகின்றன.
   D2 சீனா மற்றும் ரஷ்யா: 
       இந்தப் போரை அமெரிக்காவின் "ஆக்கிரமிப்பு" என்று வர்ணித்துள்ளன. அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்து வருவதைப் பயன்படுத்தி, சீனா தனது உலகளாவிய பிடியை வலுப்படுத்தி வருகிறது.
  D3. இந்தியா: 
       இந்தியா அமைதி காக்க வலியுறுத்துவதோடு, தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
​E.  இந்தியாவின் மீதான தாக்கம்:
இந்தியாவுக்கு இந்தப் போர் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது:
E1. எரிபொருள் தட்டுப்பாடு:
கச்சா எண்ணெய் விலையேற்றம் இந்திய ரூபாயின் மதிப்பைச் சரித்துள்ளது.
E2. புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு: ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளிலும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
முடிவுரை: தீர்வு என்ன?
ராணுவ ரீதியாக ஈரானை வீழ்த்துவது எளிதல்ல என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. ஈரானின் நிலப்பரப்பு மற்றும் அதன் மறைமுகப் படைகளின் (Proxies) வலிமை போரை நீண்டகாலம் இழுத்தடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை: போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சில நடுநிலை நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முயன்று வருகின்றன.
வருங்காலம்: ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தம் அல்லது ஈரானின் கடல் வழிப்பாதையைத் திறக்கும் ஒரு இணக்கமான உடன்பாடு மட்டுமே உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும்.
     வாசகர் களம்
அமெரிக்காவின் தலையீடு நியாயமா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

கருத்துகள்