​நெருப்பு வளையத்தில் ஐரோப்பா: உலக அதிகார சமநிலையை மாற்றுமா 'எல் நினோ' மற்றும் காலநிலை அரசியல்?

  
               El-nino condition 
(Image sourced by Wikipedia commons )
 உலக மேடையில் நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியும் அரசியல் நகர்வுகளும் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இயற்கை தன் விஸ்வரூபத்தை மெல்ல மெல்லக் காட்டத் தொடங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் 'எல் நினோ' போன்ற பிரம்மாண்ட மாற்றங்கள், உலகளாவிய காற்றின் திசையையும் கடல் நீரோட்டங்களையும் தலைகீழாக மாற்றுகின்றன. இதன் நேரடி விளைவாகவே, இன்று ஐரோப்பியக் கண்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரான்சில் 43.8°C, ஜெர்மனியில் 41.7°C, ஸ்பெயினில் 45°C என வெப்பநிலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் வெப்ப அலையில் தவிக்க விட்டுள்ளது.

A. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் 'எல் நினோ' நெருக்கடி;

         பசுபிக் பெருங்கடலின் நடுப்பகுதி அதீத வெப்பமடைவதையே நாம் 'எல் நினோ' என்கிறோம். இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். ஆனால் தற்பொழுது  இது மனிதர்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வு, புவி வெப்பமயமாதல், 
போன்ற பிற காரணங்களால் இதன் தீவிரம் மேலும் அதிகமாக உள்ளது. பசுபிக் பெருங்கடலின் பெரும்பகுதி கொதிக்கும் நிலைக்கு தள்ளப்படும் பொழுது அதிலிருந்து வெளியேறும் பிரம்மாண்ட வெப்பம் உலக வளிமண்டலச் சுழற்சியையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
  ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை.
   இது குறித்து அண்மையில் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
       இதில் அவர் கூறியதாவது;
       "ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் பூமியில், எல் நினோ என்பது எரியும் நெருப்பில் ஊற்றப்படும் எண்ணெய் போன்றது"

B. உள்கட்டமைப்புத் தோல்வியும் அரசாங்கங்கள் மீதான மக்கள் கோபமும்:
         பொதுவாக ஐரோப்பா ஒரு குளிர் பிரதேசம் என்பதால் அங்குள்ள குடியிருப்புகள், பொது கட்டமைப்புகள், தண்டவாளங்கள், பனிக்காலத்திற்கு ஏற்ப, வெப்பத்தைத் தக்கவைக்கும் (Heat retention) தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால் தற்போது பதிவாகியுள்ள 45°C தொடர் வெப்ப அலையால்;
          ¹ தண்டவாளங்கள் வெப்பத்தில் வளைந்து இரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
          ² அதீத வெப்பத்தின் காரணமாக குளிரூட்டிகளின் (AC) பயன்பாடு அதிகரிப்பால் மின்சாரக் கட்டமைப்பு (power Grids) திணறுகிறது.
           ³ அணுமின் நிலையங்களில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும்
நன்னீர் ஆதாரங்களான ஆறுகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைய தொடங்கியுள்ளது.இதன் மூலம் மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
       மக்களின் கோபம்;
     "இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் காப்போம்" என வாக்குறுதி அளித்த அரசாங்கங்கள் மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட
பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர்.இந்த நிலை தொடரும் பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக நடக்கவிருக்கும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.
     
C. "பசுமை அரசியல்" சந்திக்கும் இருதுருவ சவால்: இடது vs வலது;

   ¹    பசுமைவாதிகளின் மோதல்;
     கார்பன் உமிழ்வை குறைக்க கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும் என அவர்கள் போராடுகிறார்கள்.
   ²   வலதுசாரிகளின் எதிர்ப்பு;
"சுற்றுச்சூழல் விதிகள் என்ற பெயரில் அரசாங்கம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் அழிக்கிறது" என்பதே வலதுசாரிகளின் முதன்மை எதிர்ப்பாகும்.
     இந்த இரு துருவ அரசியல் மோதல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமித்த கொள்கை முடிவுகளில் பெரும் தேக்க நிலையை உருவாக்கியுள்ளது.

D. "காலநிலை அகதிகள்" (Climate Refugees) மற்றும் எல்லைப் பகிர்வு அரசியல்.
    ¹  வெளிநாட்டு அகதிகள்:
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, அங்கிருந்து மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருவது தொடர்கிறது.
     ²   உள்நாட்டு அகதிகள் (புதிய திருப்பம்): 
    B. இப்போது புதிய சிக்கலாக, ஐரோப்பாவின் தென் பகுதிகளான ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலேயே வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பாவிற்குள்ளேயே மக்கள் இடம்பெயரும் "உள்நாட்டுக் காலநிலை அகதிகள்" என்ற புதிய சூழல் உருவாகியுள்ளது.
  ³   ​விளைவு: "எங்கள் நாட்டுத் தண்ணீரை, அடுத்த நாட்டுக்காரருக்குத் தர முடியாது" என்று ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள்ளேயே சண்டை போடத் தொடங்கியுள்ளன.

5. உலக அரங்கில் மாறும் ராஜதந்திர நகர்வுகள் (Geopolitical Shifts):
  ¹    பொருளாதார இழப்பு:
     கடுமையான வெப்ப அலையால் ஐரோப்பாவின் வேலை நேரமும், உற்பத்தித் திறனும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
²    உள்நாட்டுச் சுமை: காலநிலை நிவாரணங்கள் மற்றும் பொருளாதார மீட்பிற்காக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த நாட்டுப் பணத்தையே அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
³    ஆதிக்கச் சரிவு: இதனால், உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியுதவி குறைந்து, உலக அரங்கில் ஐரோப்பாவின் ராஜதந்திர ஆதிக்கம் பலவீனமடையத் தொடங்கியுள்ளது.

முடிவுரை: இயற்கை தந்த பாடம்!
​காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் உலக ஆதிக்கத்தையே மாற்றும் வல்லமை கொண்டது என்பதை ஐரோப்பாவின் நிலை உணர்த்துகிறது. சொந்த நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தவிக்கும் எந்தவொரு வல்லரசும் உலக அரங்கில் தன் ஆதிக்கத்தை இழக்க நேரிடும் என்பதே தற்போதைய புவிசார் அரசியல் காட்டும் உண்மை!

     

கருத்துரையிடுக

புதியது பழையவை