இருமுனைப் போரில் சிக்கும் மனிதநேயம்: லெபனானில் 10 லட்சம் மக்கள் இடப்பெயர்வு... 73,000 உயிர்களைப் பலிவாங்கிய காசாவின் தற்போதைய கள நிலவரம்!

     காசாவில் தற்காலிக அகதிகள் முகாம்
        (Image Source: Generated image)
மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்போதைய சூழல் மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஒருபுறம் ஐநா மற்றும் அமெரிக்கா தலைமையில் லெபனானுடன் அமைதி பேச்சு வார்த்தை, மறுபுறம் காசாவின் 70% பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை 
ஒட்டுமொத்த அமைதிச் செயல்முறையையும் முடக்கியுள்ளது.
மேலும் அங்கு நிலவிவரும் அத்தியாவசிய தேவைகள், மற்றும் மனிதாபிமான உதவிகள்,
மறுக்கப்படுவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.இதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

A.தற்காலிக போர்நிறுத்த நீட்டிப்பும் நிலவி வரும் பதற்றமும்:
          அமெரிக்காவின் தூதரக முயற்சி
வாஷிங்டனில் கடந்த மே 14-15 தேதிகளில் இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகளுக்கு இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் விளைவாக, மே 15 அன்று தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து, மே 29 அன்று இரு நாடுகளின் ராணுவப் பிரதிநிதிகளும் 
 உலகின் சக்தி வாய்ந்த ராணுவ தளமான அமெரிக்காவின் பென்டகனில் சந்தித்து ஒரு பிரத்யேக பாதுகாப்பு வழித்தட பேச்சுவார்த்தையைத் (Security Track) தொடங்கினர்.மேலும் ஜூன் 2-3 
தேதிகளில் அதிகாரப்பூர்வ அரசியல் பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

B. போர் நிறுத்த விதிமீறல் மற்றும் தீவிர வான்வழி தாக்குதல்:
லெபனான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: இஸ்ரேலியப் படைகள் தெற்கு நோக்கி மேலும் முன்னேறுகின்றன.
    அமைதி பேச்சு வார்த்தை ஒரு புறம் இருந்தாலும், முழுமையான அமைதி களத்தில் திரும்பவில்லை என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை (UNIFIL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகள்;
         ​# மே 25 திங்கட்கிழமை அன்று மட்டும் இஸ்ரேலிய படைகள் லெபனான் வான்வெளியை 91 முறை மீறிப் பறந்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
         # இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் இருந்து லெபனான் நோக்கி 399 துப்பாக்கிச் சூடு/பீரங்கித் தாக்குதல் சம்பவங்களும், மேலும்  லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தரப்பில் இஸ்ரேல் இலக்குகளை நோக்கி 11 ஏவுகணை வீச்சு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
         # லெபனான் நாட்டில் உள்ள லிடானி ஆற்றுக்குத் தெற்கே, 'பிந்த் ஜுபெய்ல்' மற்றும் 'கியாம்' ஆகிய இரண்டு இஸ்ரேலிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களை இடம்பெயர்வு செய்து ஒரு வெட்டவெளியான 'பாதுகாப்புப் பகுதியாக' மாற்ற இஸ்ரேல் ராணுவம் முயல்கிறது. இதன் மூலம் லெபனான் அமைப்புகள் அங்கு வந்து ஒளிந்துகொண்டு இஸ்ரேல் மீது தாக்க முடியாது என்பது அவர்களின் திட்டம்.

C. லெபனானில் வெளியேற்ற உத்தரவுகளும் மக்கள் இடப்பெயர்வும்:
       
லெபனான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: இஸ்ரேலியப் படைகள் தெற்கு நோக்கி மேலும் முன்னேறுகின்றன.   (Al Jazeera English)
மே 30 சனிக்கிழமை அன்று,
போர் சூழல் காரணமாக இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள மேலும் 7 கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே தெற்கு லெபனான் மற்றும் நபதியா (Nabatiyeh) நகரம் முழுவதும் இஸ்ரேல் தனது குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், அங்கு வசித்து வந்த 10 லட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் தங்குமிடம் இன்றி பொது இடங்களிலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.


D. காசாவின் தற்போதைய கள நிலவரம்: 73,000 உயிர்களைப் பலிவாங்கிய கொடூரம்.
          லெபனான் கள நிலவரம்
        (Image Source: Generated image)
      ​லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் அதே வேளையில், காசாவின் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.
       மனிதாபிமானப் பேரழிவு:
காசாவில் இந்த கொடூரப் போரின் காரணமாக இதுவரை பலியானோர் மற்றும் படுகாயமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பல்லாயிரங்களைக் கடந்து (73,000-க்கும் மேல்) மனிதாபிமானப் பேரழிவாக மாறியுள்ளதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
      # ஆக்கிரமிப்பு தீவிரம்: 
காசாவின் 70% பகுதியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் எடுத்துள்ள தீவிர ராணுவ நடவடிக்கை, அங்குள்ள எஞ்சிய உள்கட்டமைப்புகளையும் சிதைத்துள்ளது.
      # முடக்கப்பட்ட உதவிகள்:
உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் மருத்துவப் பொருட்கள் காசாவிற்குள் நுழைவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் 'வாழ்வா சாவா' என்ற கடுமையான பஞ்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

E. சர்வதேச சமூகத்தின் எதிர்வினையும் முட்டுக்கட்டையும்;
    அமைதியை நிலைநாட்ட சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், களத்தில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது.
     #  ஐநாவின் பலவீனமான நிலை:
ஐ நா வின் அமைதிப்படை போர் விதிமீறல்களை தொடர்ந்து பட்டியலிட்டாலும் தாக்குதல்களைத் தடுக்கும் அளவிற்கான அதிகாரம் அல்லது கட்டாயப்படுத்தும் சூழல் அவர்களிடம் இல்லை.
       #அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு:
      ஒருபுறம் வாஷிங்டனிலும் பென்டகனிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா முன்னெடுத்தாலும், மறுபுறம் இஸ்ரேலுக்கான ராணுவ உதவிகள் தொடர்வது அமைதிச் செயல்முறையை முடக்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் போலி நாடகம் எனவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முடிவுரை: இருமுனைப் போரில் சிக்கும் மனிதநேயம்
      மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் சூழல், வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் போர் அல்ல; அது ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கு எதிராய் நடக்கும் பேரழிவு. ஒருபுறம் வாஷிங்டன் மற்றும் பென்டகனில் நடக்கும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் காகித அளவில் நம்பிக்கையைத் தந்தாலும், மறுபுறம் லெபனானில் 10 லட்சம் மக்களின் இடப்பெயர்வும், காசாவின் தொடர் மரணங்களும் கசப்பான நிதர்சனத்தை நமக்கு உணர்த்துகின்றன.
​ஜூன் 2-3 தேதிகளில் நடக்கவிருக்கும் அதிகாரப்பூர்வ அரசியல் பேச்சுவார்த்தைகளாவது தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர அமைதியாக மாற்றுமா? அல்லது அரசியல் நகர்வுகளுக்குள் மனிதாபிமானம் நசுக்கப்படுமா? என்பதை சர்வதேச சமூகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும். ஆயுதங்களின் சத்தத்தை விட, அங்குள்ள அப்பாவி மக்களின் அமைதிக்கான குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்க வேண்டியது இந்த நூற்றாண்டின் மிக முக்கியத் தேவையாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை