மத்திய கிழக்கு பிராந்தியத்தின் (Middle East) அமைதியையும், ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையையும் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கிய காரணியாக அமைவது அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவுதான்.உலக வல்லரசான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் வலிமைமிகு நாடான
ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் பனிப்போர், உலக அரசியலின் போக்கையே மாற்றி அமைத்து வருகிறது என்பது மறுக்கத்தக்கதல்ல.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? அதில் இருக்கும் சர்வதேச அரசியல் சவால்கள் என்னென்ன? என்பதை இந்த விரிவான கட்டுரையில் அலசுவோம்.
வரலாற்றுப் பகை: நட்பில் தொடங்கி விரோதம் வரை
தற்பொழுது நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கின் ஆரம்பம் அப்படி இருக்கவில்லை. அதன் கடந்த கால பக்கங்களைத் திருப்பிப் பார்க்கும் பொழுது சரியாக 1953-ல் ஈரானின் எண்ணெய் வளங்களை அப்போதைய பிரதமர் "முகமது மொசாடெக்" அரசுடமையாக்கினார்.
இதன் விளைவாக அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் MI6 அமைப்புகள் இணைந்து 'ஆபரேஷன் அஜாக்ஸ்' (Operation Ajax) என்ற ரகசிய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் அவரின் பதவி பறிக்கப்பட்டது.
(Image sourced by Wikipedia commons)
அதன் பிறகு, மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவியிடம் முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்கா-ஈரான் கூட்டணி மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவெடுத்தது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சியும் இரண்டு பட்ட இரு துருவங்களும்
Islamic Revolution
(Image sourced by Wikipedia commons )
சரியாக 1979 அன்று ஈரானிய மக்களிடையே இஸ்லாமிய புரட்சி வெடித்தது. இதனை அடுத்து மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அந்நாட்டின் மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சி பறிக்கப்பட்டு
பொதுமக்களால் தூக்கி எரியப்பட்டது.
அயதுல்லா ருஹொல்லா கொமேனி (Ayatollah Ruhollah Khomeini) தலைமையில் ஈரான் ஒரு 'இஸ்லாமிய குடியரசாக' (Islamic Republic) மாறியது
மேலும் ஈரானின் டெஹ்ரானில் உள்ள "அமெரிக்க தூதரகம்" முற்றுகையிடப்பட்டு, அமெரிக்கப் பணியாளர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, நிரந்தரப் பகை உருவானது.
ஜே.சி.பி.ஓ.ஏ (JCPOA) - உலகை உலுக்கிய அணுசக்தி ஒப்பந்தம்:
சர்வதேச அணுசக்தி ஒப்பந்த. பேச்சுவார்த்தை, Vienna
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பகையையும் தாண்டி, 2015-ஆம் ஆண்டு உலகமே வியந்து பார்த்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜதந்திர நகர்வு அரங்கேறியது. அதுதான் JCPOA (Joint Comprehensive Plan of Action) எனப்படும் புகழ்பெற்ற 'ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்'.
அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தீவிர முயற்சியால், ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய உலக வல்லரசுகளுடன் இணைந்து ஈரான் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
A.யுரேனியம் கட்டுப்பாடு:
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் யுரேனியம் செறிவூட்டும் திறனைக் குறைக்க ஈரான் ஒப்புக்கொண்டது.
B. சர்வதேச கண்காணிப்பு:
ஈரானின் அணுசக்தி மையங்களை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டது.
C.பொருளாதாரப் பரிசு:
இதற்குப் பகரமாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் (Economic Sanctions) நீக்கப்பட்டன. ஈரானின் கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்கு மீண்டும் வரத் தொடங்கியது.
விலகிய டிரம்ப்பும் தொடங்கிய பதற்றமும்:
உலகமே வியந்து பார்த்த இந்த அமைதி முயற்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், 'இது வரலாற்றிலேயே மிக மோசமான, ஒருதலைப்பட்சமான ஒப்பந்தம்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை அதிரடியாக வெளியேற்றினார்.
briefing 2018 Iran deal announcement.
(Image Credit: White House / Open Source)
அமெரிக்கா விலகியது மட்டுமல்லாமல்
அதிகபட்ச அழுத்தம் என்ற கொள்கையில் பிடிப்பாக இருந்தது.
இதன் மூலம் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் ஈரானின் வங்கித் துறை மற்றும் எண்ணெய் வர்த்தகம் முடங்கி, அந்நாட்டுப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதற்குப் பதிலடியாக, ஈரான் ஒப்பந்த விதிகளை மீறி, மீண்டும் அணு ஆயுதம் தயாரிக்கும் அளவிற்குத் தேவையான
உயர் ரக யுரேனியத்தைச் செறிவூட்டத் தொடங்கியது.
தற்போதைய நிலை: டிரம்பின் புதிய பிரேம்வொர்க் பேச்சுவார்த்தை:
( BBC NEWS FOR FRAMEWORK OF DEAL)
தற்போதைய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் ஒரு புதிய 'பிரேம்வொர்க்' (Framework) அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை இன்னும் கடுமையாகக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அவர் விரும்புகிறார்.
மறுபுறம், கடுமையான பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானும் தன் பொருளாதாரத்தை மீட்க இந்த பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகளும், ஈரானின் இறையாண்மையும் ஒரு பொதுவான புள்ளியில் உடன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இந்த 'பிரேம்வொர்க்' பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் புதிய அமைதியை உருவாக்கும்.
முடிவுரை
அமெரிக்கா - ஈரான் இடையேயான கடந்த கால நட்பு, 1979-ல் வெடித்த இஸ்லாமிய புரட்சி, 2015-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA), மற்றும் 2018-ல் ஏற்பட்ட திடீர் முறிவு என இந்த இரு நாடுகளின் உறவும் ஒரு விறுவிறுப்பான வரலாற்றுத் திரைப்படம் போன்றது. பல ஆண்டுகள் நீடித்த பகையையும், போரின் விளிம்பு வரை சென்ற பதற்றங்களையும் தாண்டி, தற்பொழுது டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள புதிய 'பிரேம்வொர்க்' அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பது உலக அரசியலில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெறும் காகித அளவிலான ஒப்பந்தமாக நின்றுவிடாமல், இரு நாடுகளும் தங்களின் பிடிவாதங்களை தளர்த்தி நேர்மையுடன் செயல்பட்டால் மட்டுமே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இரு துருவங்களாக நிற்கும் அமெரிக்காவும் ஈரானும் இணையும் அந்தப் புள்ளிதான் உலக அமைதிக்கான முதற்படியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.தொடர்ந்து வாசித்தமைக்கு நன்றி